வேண்டுமென்றால் பாருங்கள் ரோஹித் சர்மா அசால்டாக 2 சதம் அடிப்பார் – முன்னாள் வீரர் அதிரடி கணிப்பு.

அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஐசிசி 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் நடைபெறுகிறது. உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிக்கும் இந்த தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா 2011ஆம் ஆண்டு கடைசியாக சொந்த மண்ணில் கோப்பையை வெ

By ·

அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஐசிசி 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் நடைபெறுகிறது. உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிக்கும் இந்த தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா 2011ஆம் ஆண்டு கடைசியாக சொந்த மண்ணில் கோப்பையை வென்றது போல் சாம்பியன் பட்டம் வென்று சரித்திரம் படைக்குமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் காணப்படுகிறது.

அதற்கு சாதகமாக பும்ரா, கேஎல் ராகுல் ஸ்ரேயாஸ் ஆகியோர் காயத்திலிருந்து குணமடைந்து விளையாடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளதும் இந்திய அணியை பலப்படுத்துவதாக அமைந்துள்ளது.இந்த நிலைமையில் இத்தொடரில் இந்தியா வெற்றி காண்பதற்கு ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி ஆகியோர் அடங்கிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடியான செயல்பாடுகளை வெளிப்படுத்துவது அவசியமாகிறது.

ஏனெனில் 2017 சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனல் முதல் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரை டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சுமாராக செயல்பட்டதே தோல்வியை கொடுத்தது. அந்த நிலைமையில் விராட் கோலி மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தற்சமயத்தில் நல்ல ஃபார்மில் இருக்கும் நிலையில் சமீப காலங்களாகவே தடுமாறி வரும் கேப்டன் ரோஹித் சர்மாவின் ஃபார்ம் தான் ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

இவ்ந்த நிலையில் தான் ஆகாஷ் சோப்ரா ரோஹித் சர்மா பார்ம் குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில் “ரோஹித் சர்மா 9800க்கும் மேற்பட்ட ரன்களை அடித்துள்ளார். அதில் 30 சதங்களை கிட்டத்தட்ட 49 என்ற சராசரியிலும் 90 என்ற ஸ்ட்ரைக் ரேட்டிலும் அடித்துள்ள அவர் ஆசிய கட்டத்திலும் இதே புள்ளி விவரங்களை வைத்துள்ளார். எனவே ரோகித் இத்தொடரில் அசத்துவார் என்று நம்பலாம். குறிப்பாக 9 போட்டிகளில் விளையாடினால் அவர் குறைந்தது 2 சதங்கள் ஒரு டாடி சதம் அடிப்பார் என்று நம்புகிறேன். சுப்மன் கில் நல்ல ஃபார்மில் இருந்தாலும் ரோகித் சர்மாவுடன் ஒப்பிடும் போது மிகவும் சிறியவர்

27 போட்டிகளில் 62 என்ற அளவில் இருக்கும் அவருடைய சராசரி ஆசிய கண்டத்தில் 64 என்றளவில் இருக்கிறது. மேலும் அவருடைய 4 சதங்களில் 3 ஆசிய கண்டத்தில் அடிபட்டுள்ளது. எனவே கில் மற்றும் ரோஹித் ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் சார்ந்து விளையாடுகிறார்கள். அவர்களைக் கடந்து சென்றால் தற்போதைய ஒரு நாள் கிரிக்கெட்டின் தந்தையான விராட் கோலி இருக்கிறார்”

275 போட்டிகளில் சுமார் 13000 ரன்களை 57 என்ற சராசரியில் குவித்துள்ள அவர் அடித்துள்ள 46 சட்டங்களில் 31 ஆசிய கண்டத்தில் வந்துள்ளது. குறிப்பாக ஆசிய கண்டத்தில் மட்டும் 7400க்கும் மேற்பட்ட ரன்களை 58 என்ற சராசரியில் குவித்துள்ளார். எனவே இந்த உலகக் கோப்பையில் மற்ற அணிகளை காட்டிலும் இந்தியாவின் டாப் ஆர்டர் வலுவாகவே இருக்கிறது” என்று கூறினார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை