ஐபிஎல் அணிக்கே கேப்டனாக இல்லாத போது அவர் எப்படி இந்திய அணியில் கேப்டனாக இருக்க முடியும் – ஆகாஷ் சோப்ரா
ஐபிஎல் 2024 தொடருக்கு முன்பாக குஜராத் மற்றும் மும்பை அணிகள் குறித்து பல சர்ச்சைகள் எழுந்து வந்துள்ளது. குஜராத் அணியின் கேப்டனாக இருந்து வந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி 15 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. ஐபிஎல்2022-ல் இருந்து குஜராத்
ஐபிஎல் 2024 தொடருக்கு முன்பாக குஜராத் மற்றும் மும்பை அணிகள் குறித்து பல சர்ச்சைகள் எழுந்து வந்துள்ளது. குஜராத் அணியின் கேப்டனாக இருந்து வந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி 15 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. ஐபிஎல்2022-ல் இருந்து குஜராத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருந்து வருகிறார். இவர் கேப்டனாக பதவி வகித்த முதல் போட்டியிலேயே கோப்பையை குஜராத் அணிக்கு பெற்று தந்தார்.
ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி வரை சென்று சென்னை சென்னை அணியிடம் தோல்வியை தழுவி இரண்டாவது இடத்தை பிடித்தார். ஐபிஎல் வரலாற்றில் கோப்பை வென்ற ஒரு அணியின் கேப்டனை மற்ற அணிக்கு வர வைப்பதற்காக பேரம் பேசி இருப்பது இதுதான் முதல் முறையாகும். குஜராத் அணி 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தான் அந்த அணி அறிமுகமானது அப்போது அந்த அணியின் ஹர்திக் பாண்டியாவை குஜராத் அணியின் கேப்டனாக நியமித்தது. இதற்கு முன்பாக அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆல் ரவுண்டராக விளையாடி வந்தார்.
அவருக்கு காயம் ஏற்படவே அவரால் மும்பை இந்தியன்ஸ் அணியில் சரியாக விளையாட முடியவில்லை. அதன்பின் காயம் சரியான பின் அவர் குஜராத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். மேலும் 2023 ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி வரை சென்று பலம் வாய்ந்த அணி என்று அவர் நிரூபித்துக் கொண்டிருந்தார். இப்படி ஒரு சிறப்பான கேப்டனாக இருந்த போதும் மும்பை இந்தியன்ஸ் அவரை வாங்குவதற்காக குஜராத் அணியிடம் பேரம் பேசி உள்ளது. குஜராத் அணியும் அவரை மும்பை அணிக்கு அனுப்பி விடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு பதிலாக மும்பை அணி யாரையும் குஜராத் அணிக்கு அனுப்பவில்லை. மும்பை அணி ஹர்திக் பாண்டியாவை வாங்கியுள்ளதாக மீண்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த செய்திகள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
ஹர்திக் பாண்டியா எதற்காக குஜராத் அணியின் கேப்டனாக இருந்து மும்பை அணிக்கு மாற வேண்டும்? இது அவருடைய கேப்டன் தொழிலில் தனிப்பட்டதற்கு சரியானதாக இல்லை. அவர் குஜராத்தானின் கேப்டன் இல்லாமல் அவர் இந்திய அணியின் டி20 அணிக்கும் கேப்டனாக இருந்து விட்டார். எனவே இப்போது குஜராத் அணியின் கேப்டனாக இல்லை. மேலும் அவர் மும்பை அணியில் கேப்டனாக அவர் விளையாட வாய்ப்பு கிடையாது.
அப்படி என்றால் அவர் இந்திய அணிக்கும் கேப்டனாக இருக்க நினைக்க கூடாது. நீங்கள் எந்த கோணத்தில் இந்த விஷயத்தை எடுத்து பார்த்தாலும் சரியாக தெரியவில்லை. நீங்கள் உங்கள் ஐபிஎல் அணியில் கேப்டனாக இல்லாத போது நீங்கள் எப்படி இந்திய அணிக்கு கேப்டனாக இருக்க முடியும் இது இந்திய டி20 உலக கோப்பைக்கு கேப்டனாக நீங்கள் இருக்க விருப்பப்படுகிறீர்கள். ஆனால் அது சரியான முடிவு கிடையாது என்றும் அவர் கூறியிருந்தார்.