ஒரே வருஷத்துல அப்பாவும் அண்ணனும் இறந்துட்டாங்க. எங்க அப்பக்காக என்னால இத மட்டும் தான் செய்ய முடியும் – உருக்கமாக பேசிய ஆகாஷ் தீப்.
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றனர். அதில் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2 - 1 என்ற கணக்கில் இந்திய அணி முதலில் இருந்து வருகிறது. இன்று நாலாவது போட்டியானது ராஞ்சியில் இரு அணிகளும் விளையாடி வருகிறது. இதில்
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றனர். அதில் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2 – 1 என்ற கணக்கில் இந்திய அணி முதலில் இருந்து வருகிறது. இன்று நாலாவது போட்டியானது ராஞ்சியில் இரு அணிகளும் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து இருந்தது. அது ஆரம்பத்தில் அவர்களுக்கு சொதப்பலாக இருந்தாலும் அதன் பின் சிறப்பாக விளையாடி இருந்தனர்.
இன்றைய நாள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்களை அடித்து இருந்தது. இதில் முதல் செஷனில் இந்திய அணியின் கைகள் ஓங்கி இருந்த நிலையில் உணவு இடைவேளைக்குப் பிறகு இங்கிலாந்து அணியின் வீரர் ரூட் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு சவாலாக இருந்தார். இந்திய அணியின் அறிமுக வீரர் ஆகாஷ் தீப் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது திறமையை நிரூபித்து இருந்தார்.
இங்கிலாந்து அணியின் வீரர்களான பென் டக்கெட் 11 ரன்னிலும் போப் ரன் ஏதும் எடுக்காமலும் க்ராலி 42 ரன்னிலும் பேர்ஸ்டோ 38 ரன்னிலும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 3 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். நிதானமாக விளையாடி கொண்டு இருந்த பென் போக்ஸ் அரை சதத்தை தவறவிட்டு 47 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஹார்ட்லி 13 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினார். நாள் முடிவில் ஜோ ரூட் சதத்தை பூர்த்தி செய்த நிலையில் ஆட்டமிழக்காமல் இருந்து வருகிறார்.
மேலும் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாகவே செயல் பட்டு இருந்தனர். இதில் குறிப்பாக அறிமுக வீரரான ஆகாஷ் தீப் 70 ரன்களை விட்டுகொடுத்து 3 விக்கெட்டுகளையும் முகமது சிராஜ் 60 ரன்களை விட்டுகொடுத்து 2 விக்கெட்டுகளையும் ஜடேஜா 55 ரன்களை விட்டுகொடுத்து 1 விகெட்டையும் அஷ்வின் 83 ரன்களை விட்டுகொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர். எனவே இங்கிலாந்து அணி இன்றைய நாள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்களை அடித்து இருந்தது. அறிமுகமான போட்டி குறித்து ஆகாஷ் தீப் கூறுகையில்,
கேப்டனும் பயிற்சியாளர்களும் என்னை எளிமையாக வைத்திருக்கும்படி கேட்டுக் கொண்டனர். இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பது எனது கனவு. அணியை எப்படி அழகாக்குவது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். நல்ல ஏரியாக்களில் பந்துவீசுவது பற்றி தான் நினைத்துக் கொண்டிருந்தேன். அறிமுகத் தொப்பியைப் பெறுவது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமானதாக இருந்தது.
ஒரு வருடத்தில் நான் என் தந்தையையும் சகோதரனையும் இழந்தேன், எனது பயணம் கடினமாக இருந்தது மற்றும் எனது குடும்பம் பெரிய பங்கைக் கொண்டுள்ளது எனது பயணத்தில் எனது குடும்பம் மிகப் பெரிய பங்கு வகித்துள்ளது. இந்த சிறந்த ஆட்டத்தை எனது மறைந்த தந்தைக்கு அர்பணிக்கிறேன் என்றும் அவர் கூறி இருந்தார்.