இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு இருந்தனர். எல்லாப் பெருமையும் அவர்களின் பந்துவீச்சாளர்களையே சேரும் – மார்க்ரம்.
இந்திய அணி இறுதிப் போட்டியின் தோல்விக்குப் பிறகு அடுத்த வருடம் நடக்கவிருக்கும் டி20 உலக கோப்பை போட்டிருக்க இந்திய அணி வீரர்களை இளம் வீரர்களை தயார் செய்து வருகிறது. அதற்கு முதற்கட்டமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து தொடர்களை கொண்ட டி20 போட்டியில் இந்திய அணி 4-1 என்ற வித்தியாசத்தி
இந்திய அணி இறுதிப் போட்டியின் தோல்விக்குப் பிறகு அடுத்த வருடம் நடக்கவிருக்கும் டி20 உலக கோப்பை போட்டிருக்க இந்திய அணி வீரர்களை இளம் வீரர்களை தயார் செய்து வருகிறது. அதற்கு முதற்கட்டமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து தொடர்களை கொண்ட டி20 போட்டியில் இந்திய அணி 4-1 என்ற வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்று வடிவ கிரிக்கெட்டுகளையும் விளையாட உள்ளது அதில் முதல் கட்டமாக டி20 போட்டியானது 1 – 1 வித்தியாசத்தில் சமம் செய்தது.
அடுத்த கட்டமாக இந்திய அணி ஒருநாள் போட்டியின் முதல் போட்டியை விளையாடியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் மார்க்ரம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால் அது அவர் தேர்வு செய்ததற்கு ஒரு துளி கூட அவர்களுக்கு அது சாதகமாக அமையவில்லை என்று சொல்லலாம். தென்னாப்பிரிக்கா அணியின் பெரும்பாலான வீரர்கள் ஜீரோ என்ற எண்ணிலே ஆட்டம் இழந்து வெளியேறினார். இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தென்னாப்பிரிக்க அணியின் வீரர்கள் தடுமாறி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வந்தனர்.
தென் ஆப்பிரிக்கா அணியின் சார்பாக அதிகபட்சமாக ஆண்டிலே பஹ்லுகுவாயோ அவர் 33 ரன்களும் டோனி டி ஜோர்ஜி 28 ரன்களுக்கும் மார்க்கம் 12 ரன்களை மட்டுமே அடித்திருந்தனர். எனவே தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்க்கு தாக்குப் பிடிக்க முடியாமல் 27.3 ஓவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்களை மட்டுமே அடித்திருந்தது. இது தான் தென்னாப்பிரிக்கா அணி தென்னாப்பிரிக்கா மைதானத்தில் குறைந்த பட்ச ஸ்கோர் இதுவே ஆகும்.
இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் அற்புதமாக பந்து வீசியிருந்தனர். அர்ஷ்தீப் சிங் ஒரு நாள் போட்டியில் இன்று தான் முதல் விக்கெட்டை வீழ்த்தி இருந்தனர். இந்த போட்டியில் அவர் ஐந்து விக்கெட்களையும் ஆவேஷ் கான் நான்கு விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர். 117 ரன்கள் இலக்காகக் கொண்ட களமிறங்கிய இந்திய அந்த இலக்கை 16.4 ஓவரில் எளிதாக விட்டு வெற்றி பெற்றது.
இதிலிருந்து அணியின் அதிகபட்சமாக தமிழகத்தை சேர்ந்த அறிமுக வீரராக சாய் சுதர்ஷன் 55 ரன்கள் ஸ்ரேயாஸ் ஐயர் 52 ரன்களும் ருதுராஜ் கெய்க்வாட் 5 ரன்னையும் எடுத்திருந்தனர். எனவே இந்திய அணி 16.4 ஓவர்களில் இரண்டு விக்கெட் மட்டுமே இழந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் இருக்கின்றது.தோல்வி குறித்து மார்க்ரம் கூறுகையில்,
இது கடினமான ஒன்று. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நாங்கள் நன்றாக பேட்டிங் செய்ய விரும்புவோம். இந்திய பந்துவீச்சாளர்களுக்கு தான் அந்த பெருமை. முதல் பந்திலேயே நாங்கள் பின்தங்கினோம். அதில் இருந்து எங்களால் மீண்டு வர முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகச் செல்லும் என்று எதிர்பார்த்தோம். முதல் 6-7 ஓவர்களில், அது கொஞ்சம் செய்கிறது. இன்று, அது சிறிது நேரம் நீடித்தது மற்றும் அவர்கள் நன்றாக பந்து வீசினர். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் நாம் ஸ்மார்ட் விருப்பங்களை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்