அனைத்து கிரிக்கெட் வீரர்களும் இந்த இந்திய வீரரை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் – பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் இமாத் வாசிம்.
அனைவரும் விராட் கோலியிடம் இருந்து அறிவுரைகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் கருத்து தெரிவித்து இருந்தார். இந்திய அணியின் வீரர்கள் மற்ற அணிகளின் வீரர்களின் உடற்தகுதியை ஒப்பிடும் போது இந்திய வீரர்கள் உடற்தகுதியில் முன்னிலையிலே இருப்பார்கள். அதற்க்கு முக்கிய க
அனைவரும் விராட் கோலியிடம் இருந்து அறிவுரைகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் கருத்து தெரிவித்து இருந்தார். இந்திய அணியின் வீரர்கள் மற்ற அணிகளின் வீரர்களின் உடற்தகுதியை ஒப்பிடும் போது இந்திய வீரர்கள் உடற்தகுதியில் முன்னிலையிலே இருப்பார்கள். அதற்க்கு முக்கிய காரணம் விராட் கோலி தான் என்றும் பலர் அவரை பாராட்டி இருந்தனர். அவர் இந்திய அணியின் கேப்டனாக இருந்த காலகட்டத்தில் அவர் வீரர்களின் உடற்தகுதியை அவர் மேம்படுத்தி இருந்தார்.
அது மட்டுமல்லாமல் விராட் கோலி தன்னுடைய உடற்தகுதியும் அவர் மேம்படுத்திக் கொண்டே தான் உள்ளார்.இந்திய அணியின் கேப்டனாக இருந்த போது விராட் கோலி செய்ததை பார்த்து பல அணிகளும் வீரர்களின் உடற்தகுதியில் ஈடுபாட்டில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர். விராட் கோலி உடற்தகுதியை மேம்படுத்த சரியான உடற்பயிற்சி செய்து சரியான உணவு பழக்க வழக்கங்களை கையாண்டு அவர் உடற்தகுதியை மேம்படுத்தி வருகின்றார்.
விராட் கோலி எப்போதும் தன்னுடைய உடல் தகுதியை உச்சத்தில் வைத்து இருகின்றனர். அதற்காக அவர் சரியான மற்றும் கடுமையான உணவு கட்டுப்பாட்டுகளை அவர் மேற்கொண்டு, தனது இந்திய அணிக்குள்ளும் அதை புகுத்தி இன்று இந்திய அணியின் தான் கேப்டனாக இல்லாத பொழுதும், அதையே இந்திய அணி பின்பற்றும்படி செய்திருக்கிறார். மேலும் வீரர்கள் விராட் கோலியிடம் இருந்து பலவற்றை கற்றுக்கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் இமாத் வாசிம் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ஒவ்வொருவரும் விராட் கோலியிடம் இருந்து அறிவுரைகளை பெற்று கற்றுக்கொள்ள வேண்டும். கிரிக்கெட்டை விட்டு விலக வேண்டாம் என்று நான் அவரிடம் கூறுவேன், ஏனென்றால் உலகம் உங்களை மேலும் மேலும் மைதானத்தில் பார்க்க விரும்புகிறது. உலக கிரிக்கெட்டிற்கு அவர் அதிகம் தேவை, மக்கள் அவரைப் போன்ற குணத்தை கிரிக்கெட்டில் பார்க்க விரும்புகிறார்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.