சிக்ஸர் மழையில் நினைந்த வான்கடே மைதானம், தோற்றாலும் ரசிகர்களை கவர்ந்த ரஷீத் கான்.

ஐபிஎல் 2023ல் இன்று மிகவும் அற்புதமான ஆட்டம் நடைபெறுகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரு பலம் வாய்ந்த அணிகள் நேருக்கு நேர் மோதி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் சிறப்பாக பேட

By ·

ஐபிஎல் 2023ல் இன்று மிகவும் அற்புதமான ஆட்டம் நடைபெறுகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரு பலம் வாய்ந்த அணிகள் நேருக்கு நேர் மோதி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்து 218 ரன்கள் குவித்தது.இதன் முலம் மும்பை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையிலான ஆட்டத்தில், டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி நல்ல தொடக்கத்தை பெற்றது. ரோகித் சர்மாவும், இஷான் கிஷானும் வேகமாக பேட்டிங் செய்ய முயற்சித்தனர். ஆனால் ரோஹித் ஷர்மா 18 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து, இஷான் கிஷான் 20 பந்துகளில் 1 சிக்ஸர்-4 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

இவர்கள் இருவரும் ஆட்டமிழந்ததையடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். அதோடு தன்னுடைய முதல் ஐபிஎல் சத்தத்தையும் அடித்து அசத்தினார். சூரியகுமார் யாதவ் அவர் 49 பந்துகளில் 6 சிக்ஸர்கள் 11 பவுண்டரிகள் உதவியுடன் 103 ரன்கள் எடுத்தார். சூர்யாவைத் தவிர, விஷ்ணு வினோத் அதிரடியாக 30 ரன்கள் எடுத்தார். முதல் இன்னிங்கில் ரஷித் கான் 4 விக்கெட்டுகளையும், குஜராத்தைச் சேர்ந்த மோஹித் 1 விக்கெட்டையும் கைப்பற்றினார்.

இறுதியில் மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணிக்கு தொடக்கமே மோசமாக இருந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொடக்க ஆடாக்காரர்கள் ஷுப்மான் கில் 6 ரன்களிலும், சாஹா 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் குஜராத் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து களமிறஙகிய டேவிட் மில்லர் பொறுமையாக ஆடிவந்த நிலையில் அவரும் 41 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இதனால் குஜராத் வெற்றியடையும் என்று இருந்த கொஞ்ச நெஞ்ச நமபிக்கையும் ரசிகர்களுக்கு இல்லாமல் போனது. ஆனால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் அதிரடியாக ஆட ஆரம்பித்தார் ரஷித் கான். அதிரடியாக ஆடி சிக்ஸர்களை நாலாபுறமும் பறக்கவிட்ட ரஷீத் கான் 21 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

மேலும் ஒவ்வொரு பந்திலும் ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்து கொண்டே இருந்தார். ஆனால் அவரால் தனது அணியை வெற்றிப்பாதைக்கு எடுத்து செல்ல முடியவில்லை என்றாலும். அவர் 32 பந்துகளில் 10 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 79 ரன்கள் எடுத்தார். இதன் முலம் தோல்வியுற்றாலும் பல்லாயிரம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் ரஷீத் கான்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை