தோனி சிஎஸ்கேவில் இல்லை என்றால் என்ன நடக்கும் தெரியுமா? அம்பதி ராயுடு ஓபன் டாக்.

.எஸ்.தோனிக்கு புதிய மற்றும் விண்டேஜ் பைக்குகளின் மீதியுள்ள ஆர்வம் அனைவரும் அறிந்ததே. ஆனால் தனக்கு பழைய கார்களின் மீதும் பிரியம் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்திய அணியின் தலைசிறந்த கேப்டங்களில் ஒருவர் எம்.எஸ்.தோனி. அவர் க

By ·

.எஸ்.தோனிக்கு புதிய மற்றும் விண்டேஜ் பைக்குகளின் மீதியுள்ள ஆர்வம் அனைவரும் அறிந்ததே. ஆனால் தனக்கு பழைய கார்களின் மீதும் பிரியம் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்திய அணியின் தலைசிறந்த கேப்டங்களில் ஒருவர் எம்.எஸ்.தோனி. அவர் கேப்டனாக ஆனவுடன் கடந்த 2007ஆம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை போட்டியில் அற்புதமான வெற்றியை பெற்று தந்தார் தோனி.

பின்னர் இந்த வெற்றி தொடர ஆரம்பித்து பல போட்டிகளில் வெற்றி பெற்ற தோனி 2011ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் பல ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை வென்று கொடுத்தார். இதற்கு பிறகு 2013ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியிலும் கோப்பையை வென்று கொடுத்த தோனி ஐபிஎல் போட்டியிலும் சென்னை அணிக்காக 5 கோப்பைகளை வென்றது கொடுத்தார்.

இரண்டு மாத கால சீசனுக்குப் பிறகு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனால் அடுத்த வருடம் நடக்கும் உலக கோப்பை தொடரில் தோனி கலந்து கொள்ள மாட்டார் என்றிருந்த நிலையில் 2024 நடக்கும் ஐபிஎல் சீசனில் தோனி விளையாட இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த நிலையில் தான் தோனி பற்றியும் சென்னை அணி பற்றியும் பேசியுள்ளார் முன்னாள் CSK வீரர் அம்பதி ராயுடு.

அவர் கூறுகையில் “ஒரு வீரராக நான் சொல்கிறேன். மும்பை இந்தியன்ஸ் அணியில் X வீரராக இருந்தாலும் சரி Y வீரராக இருந்தாலும் சரி மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்கள் அனைவரும் அந்த வீரரை ஆதரிப்பார்கள். எப்போதுமே அது மும்பை இந்தியாஸ் வீரர்களை பொருத்தவரையில் நடக்கும். ஆனால சென்னை சூப்பர் கிங்ஸ் அணியாது கொஞ்சம் வேறு மாதிரியானது.

அதாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களுக்கு முதலில் எம் எஸ் தோனிதான் அதற்கு பிறகுதான் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. மகேந்திர சிங் தோனி அங்கு இல்லை என்றால் சென்னை அணி விளையாடும் மைதானம் பாதி நிரம்புமா என்பதே சந்தேகம் தான். ஏனென்றால் அவர்கள் அனைவரும் மகேந்திர சிங் தோனியின் ரசிகர்கள் என்று கூறினார் அம்பதி ராயுடு.

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் CEO காசி விஸ்வநாதன் பேசுகையில் “எங்களுடைய தலைவன் ஒரு வார்த்தை கூறிவிட்டார் என்றால் அதிலிருந்து அவர் மாற மாட்டார். அவர் என்ன செய்யப்போகிறார் என்பது குறித்து ஏற்கனவே முடிவு செய்து விட்டார். எனக்கு தெரிந்த வரையில் தோனி என்ன சொல்கிறாறோ அதைத்தான் செய்வார். அவர் தற்போது உடற்ப்பகுதியுடன் இருக்கிறார். தலைவன் எப்போதுமே தலைவன் தான் என்று கூறினார் விஸ்வநாதன்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை