அனைத்து இந்திய கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த அம்பாதி ராயுடு – அவரே போட்டுள்ள உருக்கமான பதிவு.
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த வீரர்களில் ஒருவர் அம்பாதி ராயுடு. இவர் இந்திய அணியில் மட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்நிலையில் 37 வயதாகும் அம்பாதி ராயுடு சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு பல சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த வீரர்களில் ஒருவர் அம்பாதி ராயுடு. இவர் இந்திய அணியில் மட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்நிலையில் 37 வயதாகும் அம்பாதி ராயுடு சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு பல சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இந்த வருட ஐபிஎல் தொடரில் சென்னை அணி வெற்றியடைய முக்கிய காரணமாக இருந்தார்.
அவர் இந்த போட்டியில் அடித்த 2சிக்ஸர் மற்றும் 2 போர்கள் போட்டியின் திருப்பு முனையாக அமைந்தது. அப்படிப்பட்ட நிலையில் தான் அம்பாதி ராயுடு தன்னுடைய ஓய்வை திடீரென அறிவித்துள்ளார். அது தொடர்பாக அவர் பதிவிட்டிருந்த ட்விட்டர் பதில் உருக்கமாக அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில் “இது எனக்கு ஒரு உணர்ச்சிப்பூர்வமான தருணம் ஐபிஎல் கோப்பையை வென்றதில். இந்த உணர்ச்சியோடு நான் என்னுடைய ஓய்வை அறிவிக்கிறேன். நான் அனைத்து இந்திய கிரிக்கெட் போட்டிகள் அனைத்தில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன். நான் சிறுவயதில் டென்னிஸ் பந்துகளை வைத்து கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தேன். ஆனால் அதற்கு பிறகு இப்படியொரு அற்புதமான பாதையில் நான் வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை.
u15 கிரிக்கெட் போட்டியில் இருந்து என்னுடைய நாட்டிற்காக நான் விளையாடியதை நான் பெருமையாக நினைக்கிறேன். நான் இந்திய அணியின் தொப்பியை அணிந்த நாள் இன்று எனக்கு நியாபகம் இருக்கிறது. அந்த நிகழ்வை நான் போற்றி பாதுகாப்பேன். நான் பிசிசிஐ, ஆந்திர கிரிக்கெட் அசோசியேஷன், ஹைதராபாத் கிரிக்கெட் அசோசியேஷன், விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் மற்றும் பரோடா கிரிக்கெட் அசோசியேஷன் உள்ளிட்டோர் என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு வழங்கியதற்கு மிக்க நன்றி.
அதோடு நான் ஐபிஎல் போட்டிகளை விளையாடிய மும்பை இன்டியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன். 6வது முறை நான் ஐபிஎல் கோப்பையை வென்றது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. மும்பை அணிக்கு கடந்த 2013ஆம் ஆண்டு வந்து அதற்கு பிறகு சென்னை அணியுடன் 2018,2021,2023 ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பைகளை வென்றது என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு தருணம்.
அதுவும் கேப்டன் தோனியுடனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனும் விளையாடியதை நான் பாக்கியமாக கருதுகிறேன். இவர்களோடு எனக்கு அற்புதமான நினைவுகள் இருக்கிறது. அது என்றென்றும் என்னுடைய மனதில் நீங்காது இருக்கும். மேலும் இது கண்டிப்பாக என்னுடைய குடும்பம் இல்லாமல் சாத்தியமாகி இருக்காது. குறிப்பாக என்னுடைய அப்பா சாம்பசிவ அவர்களுக்கு நன்றி.
என்னுடைய தொடக்க காலத்தில் என்னுடன் பழகிய சக வீரர்கள், எங்களுடைய பணியாற்றிய ஊழியர்கள், என்னுடைய ரசிகர்கள் மற்றும் பயிச்சியாளர்களுக்கு மிக்க நன்றி. நீங்க்ள் இல்லாமல் இந்த அற்புதமான என்னுடைய கிரிக்கெட் பயணம் நடந்திருக்காது. என்னுடைய ஏற்ற இரங்கங்களில் என்னுடன் இருந்த அனைவருக்கும் மிக்க நன்றி. நீங்கள் எனனை அதிகமாக ஊக்குவித்தீர்கள். உங்கள் அனைவரையும் அடுத்த பக்கத்தில் சந்திக்கிறேன் நன்றி என்று உருக்கமாக பதிவிட்டிருந்தார் ராயுடு.