தோனி அப்படி விளையாடிய காரணமே வேற.. இனி வரமாட்டாருனு நினைக்குற – அதிர்ச்சி கொடுத்த அம்பாதி ராயுடு
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 அன்று தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் போட்டியானது நேற்று நடைபெற்றது. டெல்லி அணி இதற்கு முன்பு இரண்டு தோல்விகளிலும் சென்னை
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 அன்று தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் போட்டியானது நேற்று நடைபெற்றது. டெல்லி அணி இதற்கு முன்பு இரண்டு தோல்விகளிலும் சென்னை அணி இதற்க்கு முன்பு இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று நேற்றைய போட்டியில் மோதியது.
இதில் டெல்லியில் வெற்றி பெற்றால் மட்டுமே அவர்களது ஐபிஎல் 2024 முதல் வெற்றியை பதிவு செய்ய முடியும். இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பேட்டிங் செய்வதை தேர்வு செய்தார். அது அவர்களுக்கு சிறப்பாகவே அமைந்தது 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 5 விக்கெட்டுகளை மட்டுமே எழுந்து 191 ரன்களை குவித்து இருந்தது. இதனை தொடர்ந்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி தோல்வியை சந்தித்தது.
இந்த சென்னை அணியின் ஆதிக்கம் ஒரு சில ஓவர்களில் மட்டுமே இருந்தது அதன் பின்பு டெல்லி அணியின் பேட்ஸ்மேன் ஆதிக்கம் தான் இந்த போட்டியில் அதிக அளவில் இருந்தது என்று சொல்லலாம். இருந்த போதிலும் தோனி இப்படி விளையாடுவதை பார்த்த ரசிகர்கள் பலர் தங்களுடைய சென்னை அணி தோல்வியை தழுவ போகிறது என்பதை மறந்தது மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டனர்.
இந்த ஆட்டத்திற்குப் பிறகு, அவர் நிச்சயமாக வரமாட்டார் என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால் அவர் பின் வரிசையில் இறங்கினால் CSK க்கு போட்டிகளை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இப்போது அவருக்கு வந்துள்ளது. இது உண்மையில் தோனி பாய் முன் வரிசையை பேட் செய்வதைப் பார்க்கும் எங்கள் நம்பிக்கைக்கு ஒரு பின்னடைவாகும்.
போட்டி பிடியில் சிக்காமல் போய்விட்டது என்பதை மஹி பாய் அறிந்திருந்ததாக நான் உணர்கிறேன். அதனால் அவர் ஒரு போட்டியில் நடுவில் முக்கியமான பேட்டிங் பயிற்சியைப் பெற முடியும் என்று அவருக்குத் தெரியும், ஏனெனில் பிளேஆஃப் அல்லது முக்கியமான தகுதிப் போட்டியில் அத்தகைய சூழ்நிலை வரலாம் என்று அவருக்குத் தெரியும். அதனால்.அதற்கு அவர் தன்னை தயார்படுத்திக் கொண்டார்.
வெளியே நல்ல பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இன்னும் யார்க்கர்-லெந்த் பந்துகளை அடிக்க முடியுமா இல்லையா என்று அவர் தன்னைத்தானே சோதித்துக் கொண்டிருந்தார். அந்த இன்னிங்ஸை விளையாடிய பிறகு அவரது முகத்தில் நீங்கள் காணக்கூடிய மகிழ்ச்சி அவர் தனக்குள் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதாக உணர்கிறேன்.
ஒவ்வொரு அணியும் இப்போது பயப்பட வேண்டும், ஏனென்றால் இவர் கடைசி ஐந்து ஓவர்களில் வருவார். மேலும் 2005 இல் எம்எஸ் தோனியிடம் இருந்து நாங்கள் பார்த்த பேட்டிங்கை இப்போது மீண்டும் பார்ப்போம் என்றார் அம்பதி ராயுடு.