கொல்கத்தாவ பாத்து கத்துக்கோங்க.. ஆரஞ்சு தொப்பி வாங்குனா மாட்டும் போதுமா – விமர்சித்த அம்பதி ராயுடு.

உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் இறுதி போட்டியில் கொல்கத்தா அணி அற்புதமான வெற்றியை பதிவு செய்தது. சொல்லப்போனால் இந்த தொடர் முழுவதுமே கொல்கத்தா அணி சிறப்பாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இறுதி போட்டியானது சென்னை மைதானத்தில் நடந்தநால் கொல்கத்த

By ·

உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் இறுதி போட்டியில் கொல்கத்தா அணி அற்புதமான வெற்றியை பதிவு செய்தது. சொல்லப்போனால் இந்த தொடர் முழுவதுமே கொல்கத்தா அணி சிறப்பாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இறுதி போட்டியானது சென்னை மைதானத்தில் நடந்தநால் கொல்கத்தா அணிக்கு சாதகமாக சென்றது.

இந்நிலையில் இது ஒரு புறம் இருக்க இந்த தொடரில் தொடக்கத்தில் பெரும் அடிவாங்கிய பெங்களூரு அணி பின்னர் பிளே ஆஃப் செல்வதற்கு 1சதவிகிதம் வாய்ப்புதான் இருக்கும் என்ற நிலையில் தொடர்ந்து ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று சென்னை அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றது. ஆனால் எலிமினேட்டரில் ராஜஸ்தான் அணி பெங்களூரு அணியை வீழ்த்தியது. இதனால் 17 வது வருடமாக பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வெல்ல தவறியது.

இதனிடையே பெங்களூரு அணி சென்னை அணியை வீழ்த்திய போட்டியில் பல சர்ச்சைகள் உருவானது. குறிப்பாக சென்னை அணி மற்றும் பெங்களூரு அணியின் ரசிகர்களுக்கு இடையே பல சம்பவங்கள் நடந்தது. மேலும் பெங்களூரு அணி சென்னை அணியை வீழ்த்திய நிலையில் சோசியல் மீடியாவில் நேரடியாகவும் பெங்களூரு அணி சென்னை அணி குறித்து கடமையாக விமர்சித்து இருந்தது.

இதனை தொடர்ந்து சென்னை அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடுவும் ஆர்சிபி குறித்து விமர்சித்தார். மேலும் பெங்களூரு அணி ராஜஸ்தானிடம் தோல்வியை தழுவிய பொது பெங்களூரு அணி சென்னை அணியினை வீழ்த்தினால் மட்டுமே கோப்பையை வெல்ல முடியாது, பிளே ஆஃப் சுற்றிலும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று விமர்சித்திருந்தார். இந்நிலையில் தான் நேற்று கொல்கத்தா அணி கோப்பபையை வென்றது.

இதன் போது இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி 15 போட்களில் 741 ரன் எடுத்த விராட் கோலிக்கு ஆரஞ்சு தொப்பை வழங்கப்பட்டது. இதனை விராட் கோலி சார்பாக கொல்கத்தா கேப்டன் வாங்கி கொண்டார். இந்நிலையில் தான் ஆரஞ்சு தொப்பி குறித்து விமரித்து பேசியுள்ளார் அம்பதி ராயுடு.

அவர் கூறுகையில் : கொல்கத்தா அணியில் நரைன், ரஸ்ஸல் மற்றும் ஸ்டார்க் போன்ற முக்கிய வீரர்களை ஆதரித்ததற்காகவும், அணியின் ஐபிஎல் வெற்றிக்கு அவர்களின் கூட்டுப் பங்களிப்பிற்காகவும் KKR அணி பாராட்டுக்களுக்கு தகுதியானது. ஐபிஎல் வெல்வது என்பது ஆரஞ்சு தொப்பி போன்ற தனிப்பட்ட பாராட்டுக்களைப் பற்றியது கிடையது. மாறாக பல வீரர்களின் ஒட்டுமொத்த முயற்சி தான் அது. இந்த மாதிரியான அணுகுமுறையே ஐபிஎல்லில் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றார் அம்பதி ராயுடு.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை