அடுத்த வருடம் பெங்களூரு அணியில் ரோஹித் ஷர்மாவா?? விளக்கமாக பதில் அளித்த அம்பதி ராயுடு
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 தற்போது மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இது வரை மும்பை அணி மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவி இந்த சீசனில் இதுவரை ஒரு வெற்றியை கூட பெறாமல் புள்ளி பட்டியலில் கடை
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 தற்போது மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இது வரை மும்பை அணி மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவி இந்த சீசனில் இதுவரை ஒரு வெற்றியை கூட பெறாமல் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து வருகிறது. இதற்கு முக்கியமான காரணம் அணியில் ஒருங்கிணைப்பில்லை என்றும் அணியில் இரண்டு பிரிவாக உள்ளார்கள் என்று தகவல்கள் இணையத்தில் கசிந்து வருகிறது.
அதற்கான காரணம் என்னவென்றால் கடந்து இரண்டு வருடங்களாக குஜராத் அணிக்கு கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பையில் இந்தியன்ஸ் அணி டிரேடிங்கில் மூலம் வாங்கியது. அப்போதே அது மும்பை அணிக்குள் சில் சலசப்புக்களை ஏற்படுத்தி இருந்தது. அது மட்டும் இல்லாமல் சில நாட்களிலே அவரை கேப்டனாகவும் மாற்றியது. மும்பை அணிக்காக 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோஹித் ஷர்மாவை மும்பை அணியின் வீரராக மாற்றியது. இது மும்பை அணி என்று ரசிகர்களிடையே பெரும் ஆதங்கத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருக்கின்றது.
இதன் விளைவாகவே மும்பை அணிவிளையாவது அனைத்து மைதானத்தில் சென்று மும்பை அணி ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவிற்கு எதிராக கோஷம் விடுவதையும் ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாக முழக்கங்களை விட்டு வருகின்றனர். மும்பை அணியோ இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது புள்ளிபட்டியலில் எட்டாவது இடத்தில் இருந்து வருகிறது. அதில் முதல் போட்டியில் குஜராத் அணியை எதிர்கொண்டது. அந்த போட்டியிலும் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தோல்வியை தழுவியது.
அதன் பின்பு நடந்த ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிகளிலும் 31 ரன்களிலும் ராஜஸ்தான் ராயல் அணிக்கு எதிரான போட்டியிலும் மிகவும் பரிதாப நிலையில் 6 விக்கெட்டுகளை வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதன் பின் நடந்த டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது, ஆனால் அவர் அதை நிராகரித்தார். மேலும், அடுத்த சீசனில் இருந்து mi அணிக்காக விளையாட மாட்டேன் என அவர் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன் பின் அவர் சென்னை அணியில் இணைவாரா அல்லது வேறு எந்த அணியில் இணைவார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. அது குறித்து அம்பதி ராயுடு கூறுகையில் “”RCBக்கு ரோஹித் தேவையா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் உங்களுக்கு ஒரு தலைப்பு தேவை என்று தோன்றுகிறது” இறுதியில் இது ரோஹித்தின் அழைப்பு. அவர் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். அனைத்து அணிகளும் அவரை கேப்டனாக வைத்திருப்பதை நிச்சயமாக விரும்புவார்கள். அவர் ஒரு உரிமையாளருக்கு செல்வார், அது அவரை விட சிறப்பாக நடத்தும். என்றும் அவர் கூறிஇருந்தார்