ரோஹித் இன்னும் 5-6 ஆண்டுகள் விளையாடலாம். தோனிக்கு பிறகு ரோஹித் ஷர்மா சென்னை அணியின் கேப்டனாக இருந்தால் நன்றாக இருக்கும் – அம்பதி ராயுடு

ஐபிஎல் 2024 அட்டவணை சில தினங்களுக்கு முன்பு வெளியானது அதில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மார்ச் 22ம் தேதி உள்ளது. இதில் சென்னை அணியின் கேப்டனாக தோனியும் பெங்களூர் அணியின் கேப்டனாக டுபிளசிஸ் செயல்படவுள்ளார். இது தான் தோனிக்கு கட

By ·

ஐபிஎல் 2024 அட்டவணை சில தினங்களுக்கு முன்பு வெளியானது அதில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மார்ச் 22ம் தேதி உள்ளது. இதில் சென்னை அணியின் கேப்டனாக தோனியும் பெங்களூர் அணியின் கேப்டனாக டுபிளசிஸ் செயல்படவுள்ளார். இது தான் தோனிக்கு கடைசி வருடம் என்பதால் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இது குறித்து அம்பதி ராயுடு கூறுகையில் தோனிக்குப் பிறகு ரோஹித் ஷர்மா சென்னை அணிக்கு கேப்டனாக செயல்பட்டால் எனக்கு பார்க்க பிடிக்கும் என்று சில கருத்துக்களை கூறியிருந்தார்.

இந்த வருடம் மும்பை அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்பட மாட்டார் அதற்கு பதிலாக மும்பை அணி நிர்வாகம் குஜராத் அணியிலிருந்து வந்த ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்துள்ளது. மும்பை அணியில் ரோஹித் ஷர்மா ஒரு வீரராக மட்டுமே கலந்து கொள்வார். இதற்கு முன்பு ரோஹித் சர்மா 2013ஆம் ஆண்டு கேப்டன் பதவி ஏற்ற பின் 2015, 2017, 2017, 2019 மற்றும் 2020 ஆண்டுகள் ஐந்து முறை மும்பை அணிக்கு கோப்பையை வென்று கொடுத்து உள்ளார்.

அதேபோல் தோனியும் கடந்த வருடம் மட்டுமல்லாமல் அதற்கு முன்னதாகவே தோனி தலைமையிலான சென்னை அணி பல கோப்பைகளை வென்றுள்ளார். அவரும் ஐபிஎல் ஐந்து முறை கோப்பைகளை என்ற பெருமையும் தக்க வைத்துக் கொண்டு உள்ளார். இது குறித்து அம்பதி ராயுடு கூறுகையில், ரோஹித் இன்னும் 5-6 ஆண்டுகள் விளையாடலாம். சிஎஸ்கேயில் ரோஹித் விளையாடுவதை நான் பார்க்க விரும்புகிறேன். அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இவ்வளவு காலம் விளையாடியுள்ளார்.

அவர் கேப்டனாக இருந்தால், அவர் அதை உலகில் எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் அது அவரைப் பொறுத்தது. அவர் MI க்காக பல வருடங்கள் விளையாடி பட்டங்களை வென்றுள்ளார். அதனால் அவர் அங்கு சென்றால், இன்னும் சிறப்பாக இருக்கும்.அந்த அழைப்பை ஏற்கும் உரிமையை ரோஹித் பெற்றுள்ளார். அவர் வழிநடத்த விரும்புகிறாரா இல்லையா என்பது அவரது விருப்பம். இந்த ஆண்டு, ரோஹித் இந்த ஆண்டு கேப்டனாகத் தொடர்ந்திருக்க வேண்டும்.

ஒரு வருடம் கழித்து ஹர்திக்கிற்கு அந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கலாம். T2OI களில் ரோஹித் இன்னும் இந்திய அணிக்கு கேப்டனாக இருக்கிறார். MI இந்த முடிவை எடுத்ததாக நான் தனிப்பட்ட முறையில் உணர்கிறேன், ஆனால் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அது கடினமாக இருக்கும். குஜராத் டைட்டன்ஸ் வித்தியாசமான அமைப்பைக் கொண்டிருந்தது. அணியில் பல நட்சத்திர வீரர்கள் இருப்பதால் MI-க்கு கேப்டனாக இருப்பது எளிதானது அல்ல. அதிக அழுத்தம் உள்ளது, எல்லோராலும் சமாளிக்க முடியாது, “என்று ராயுடு கூறினார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை