ரியான் பராக்கின் அதிரடி ஆட்டம்… கடைசி வரை சென்ற போட்டி… கடைசியில் எதிர்பாராத ட்விஸ்ட். வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ்

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போதுவரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதற்க்கு முன்னதாக லக்னோ அணியை வெற்றி பெற்றும் டெல்லி அணி இதற்கு முன்பு பஞ்சாப் அணியிடம் தோல்வியை தழுவியும் இன்றை

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போதுவரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதற்க்கு முன்னதாக லக்னோ அணியை வெற்றி பெற்றும் டெல்லி அணி இதற்கு முன்பு பஞ்சாப் அணியிடம் தோல்வியை தழுவியும் இன்றைய போட்டியில் விளையாடியது.இதில் டெல்லி அணி வெற்றி பெற்று முதல் வெற்றியை பதிவு செய்வோமா என்ற கேள்வி டெல்லி அணியின் ரசிகர்களிடையே பெரும்பான்மையாக இருந்தது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பணத்திற்கு 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெரிய கார் விபத்து ஓன்று நடந்தது. அவர் விளையாடாமல் இருந்தார் அவர் இந்த வருடம் தான் மீண்டும் தனது கிரிக்கெட் வாழ்விற்கு மீண்டு வந்துள்ளார். இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியின் வீரர்கள் தொடக்கத்தில் சற்று நின்று நிதானமாக விளையாடி பவர்ப்ளே ஓவரில் ரன்களை குவிக்க தவறிவிட்டனர்.

ஆனால் அதன் பின்பு வந்த ரியான் பராக் மற்றும் ஜூரேல் இணைந்து ராஜஸ்தான் அணிக்கு பெரிய இலக்கு எட்ட உதவி செய்தனர். அதில் அதிகபட்சமாக ரியான் பராக் 45 பந்துகளில் 84 ரன்கள் அடித்திருந்தார் அதில் ஆறு சிக்ஸர்கள் மற்றும் ஏழு பவுண்டரிகள் அடங்கும். அதற்கு அடுத்த இடத்தில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 19 பந்துகளில் 29 ரன்கள் எடுத்திருந்தார். அதில் அவர் மூன்று சிக்சர்களை அவர் அடித்திருந்தார். அதன் பின்பு தனது அதிரடியாக ஆட்டத்தால் ஜூரேல் 12 பந்துகளில் 20 ரன்களை அடித்து இருந்தார். அதில் அவர் மூன்று பவுண்டரிகளை அடித்திருந்தார்.

எனவே ராஜஸ்தான் ராயல் அணி ஆரம்பத்தில் சற்று தடுமாறி வந்தாலும் அதன் பின் பராக் மற்றும் ஜூரேல் சிறப்பாக செயல்பட்டதால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 185 ரன்கள் குவித்து இருந்தது. அதன் பின் பேட்டிங் செய்த டெல்லி அணியும் மிடில் ஆர்டரில் சற்று சொதப்பி இருந்தாலும் அதன் பின் வந்த வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்கள். இருப்பினும் ராஜஸ்தான் அணி ஆதிக்கம் செலுத்தி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்து இருந்தது.

இதில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 49 பந்தில் அரை சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்து வெளியேறினார். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 44 ரன்களும் பண்ட் 28 ரன்களையும் அவர் அடித்து இருந்தார். கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை பட்ட நிலையில் டெல்லி அணி 4 ரன்களை மட்டுமே அடித்தது. இதில் போல்ட் மற்றும் சஹல் தலா இரண்டு விக்கெட்டுகளையும் அவேஷ் கான் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தார். எனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை