கென்யாகிட்ட கூட ஓகே..ஆனா பாகிஸ்தான் கிட்ட தோக்காதனு சொன்ன காலம் இருந்தது – IND vs PAK குறித்து அணில் கும்ப்ளே.
கிரிக்கெட்டில் எது சுவாரசியமான போட்டி என்றால் அனைவருக்கும் முதலில் நியாபகம் வருவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி தான். கஏனெனில் அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை விளையாட்டாக பார்க்காமல் அதை கௌரவமாக கருதி ஆக்ரோசத்துடன் முழு திறமையை வெளிப்படுத்தி நேருக்கு நேர் மோதிக்
கிரிக்கெட்டில் எது சுவாரசியமான போட்டி என்றால் அனைவருக்கும் முதலில் நியாபகம் வருவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி தான். கஏனெனில் அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை விளையாட்டாக பார்க்காமல் அதை கௌரவமாக கருதி ஆக்ரோசத்துடன் முழு திறமையை வெளிப்படுத்தி நேருக்கு நேர் மோதிக் கொள்வார்கள் என்பதாலேயே இந்தியா vs பாகிஸ்தான் போட்டிகள் உலகப்புகழ் பெற்றதாக இருக்கிறது.
இந்நிலையில் உலக கோப்பை 2023 போட்டியானது வரும் ஆக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. மேலும் இந்த தொடரானது முழுமையாக இந்தியாவிலேயே நடைபெறுவதில் இந்தியாவிற்கு இது சாதகமாகவும், அதே நேரத்தில் வெற்றியடைத்தே ஆகவேண்டும் என்ற அழுத்தமும் இருக்கிறது. இந்நிலையில் உலக கோப்பையில் முதல் போட்டியானது அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டியை தொடர்ந்து ஆக்டோபர் 8ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியை இந்தியா சென்னை மைத்தனத்தில் எதிர்கொள்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மெகா மோதல் மீண்டும் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஜாம்பவான் சுழற்பந்து வீச்சாளர் அணில் கும்ப்ளே கூறியதாக ஒரு விஷயம் தற்போது சோசியல் மீடியாவில் பெரும் வைரலாகி வருகிறது.
அதாவது சோசியல் மீடியாவில் வெளியான தகவலின் படி அணி கும்ளே சொன்னதாக கூறப்படுவது என்னவென்றால் “எங்களுடைய காலத்தில் கென்யாவிடம் வேண்டுமானாலும் தோற்றுப்போகலாம், ஆனால் பாகிஸ்தானிடம் தோற்று விடாதீர்கள் என்ற ஒரு வார்த்தை இருந்தது. எனவே வீரர்கள் மீது அழுத்தமும் எதிர்பார்ப்பும் இருந்தது. இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான போட்டிகள் இப்படித்தான் விளையாடப்படுகின்றன.
ஆனால் இந்த போட்டியை இந்தியா விளையாடும் மற்றொரு போட்டியாகக் கருதுவது முக்கியமானது. மேலும் பாஸ்கிதான் உடனான போட்டியை நினைவு கூர்ந்த அணில் கும்ளே கூறுகையில் “10 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் நான் களம் இறங்கவில்லை. அந்த விஷயம் எந்த ஒரு பந்து வீச்சாளரக இருந்தாலும் ஒரு கனவாக ஒரு கனவாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.
ஆனால் கொல்கத்தாவில் நடந்த ஆசிய டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியான பாகிஸ்தானுக்கு எதிரான அடுத்த டெஸ்ட் போட்டியில், ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தேன். அதுதான் கிரிக்கெட் விளையாட்டு என்றார் அணில் கும்ப்ளே. இந்நிலையில் அணில் கும்ளே கடந்த 1999ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி பாஸ்கிதான் அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடதக்கது.