ரோஹித் ஷர்மா மட்டுமல்லாமல் இந்திய அணியின் வீரர்கள் இவ்வாறு இருக்க முக்கிய காரணம் விராட் கோலி தான் – பயிற்சியாளர்.

இந்திய அணியின் வீரர்கள் மற்ற அணிகளின் வீரர்களின் உடற்தகுதியை ஒப்பிடும் போது இந்திய வீரர்கள் உடற்தகுதியில் முன்னிலையிலே இருப்பார்கள். அதற்க்கு முக்கிய காரணம் விராட் கோலி தான் என்றும் பலர் அவரை பாராட்டி இருந்தனர். அவர் இந்திய அணியின் கேப்டனாக இருந்த காலகட்டத்தில் அவர் வீரர்களின் உட

By ·

இந்திய அணியின் வீரர்கள் மற்ற அணிகளின் வீரர்களின் உடற்தகுதியை ஒப்பிடும் போது இந்திய வீரர்கள் உடற்தகுதியில் முன்னிலையிலே இருப்பார்கள். அதற்க்கு முக்கிய காரணம் விராட் கோலி தான் என்றும் பலர் அவரை பாராட்டி இருந்தனர். அவர் இந்திய அணியின் கேப்டனாக இருந்த காலகட்டத்தில் அவர் வீரர்களின் உடற்தகுதியை அவர் மேம்படுத்தி இருந்தார். அது மட்டுமல்லாமல் விராட் கோலி தன்னுடைய உடற்தகுதியும் அவர் மேம்படுத்திக் கொண்டே தான் உள்ளார்.

இந்திய அணியின் கேப்டனாக இருந்த போது விராட் கோலி செய்ததை பார்த்து பல அணிகளும் வீரர்களின் உடற்தகுதியில் ஈடுபாட்டில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர். விராட் கோலி உடற்தகுதியை மேம்படுத்த சரியான உடற்பயிற்சி செய்து சரியான உணவு பழக்க வழக்கங்களை கையாண்டு அவர் உடற்தகுதியை மேம்படுத்தி வருகின்றார். விராட் கோலி எப்போதும் தன்னுடைய உடல் தகுதியை உச்சத்தில் வைத்து இருகின்றனர்.

அதற்காக அவர் சரியான மற்றும் கடுமையான உணவு கட்டுப்பாட்டுகளை அவர் மேற்கொண்டு, தனது இந்திய அணிக்குள்ளும் அதை புகுத்தி இன்று இந்திய அணியின் தான் கேப்டனாக இல்லாத பொழுதும், அதையே இந்திய அணி பின்பற்றும்படி செய்திருக்கிறார்.இந்திய அணியின் வீரர்களின் உடற்தகுதி குறித்து இந்திய அணியின் உடற்தகுதி பயிற்சியாளர் அங்கீத் காலியார் சில தகவல்களை தெரிவித்து இருந்தனர். இது குறித்து அவர் கூறுகையில்,

ரோகித் சர்மா பார்ப்பதற்கு தான் கொஞ்சம் குண்டாக தெரிவார் ஆனால் அவரும் பிட்டான பிளேயர் தான் விராட் கோலி போல இருக்கின்றார். அவர் தேர்வு நேரத்தில் மிகவும் சுறு சுறுப்பாக இருப்பார். களத்தில் அவருடைய சுறுசுறுப்பு எப்போதும் நாம் பார்த்திருக்கின்றோம். விராட் கோலியின் உடல் தகுதி என்பது ஒரு தடகள வீரருக்கு சமமாக இருக்கும். ஒரு விஷயத்தில் மிகவும் கட்டுக்கோப்பாக இருப்பார். உடற்பயிற்சி மட்டுமில்லாமல் உணவு பழக்கத்திலும் அவர் மிகுந்த கட்டுப்பாட்டை கொண்டுள்ளார்.

சுப்மான் கில் மிகவும் உடல் தகுதி கொண்டவராக இருக்கின்றார். அவர் உடல் தகுதி மட்டுமல்லாமல் திறமையுடன் விராட் கோலி பின்பற்றக் கூடியவர். அவர் எல்லா விதத்திலும் வருங்காலத்தில் நாட்டுக்கு சிறப்பாக செயல்படுவார் என்று நம்பிக்கை உள்ளது. இந்திய கிரிக்கெட் உடல் தகுதி கலாச்சாரத்தை புகற்றியவர் விராட் கோலி தான். அவர் கேப்டனாக இருந்தபோது அவரை முன்னேற்ற உடல் தகுதியில் உதாரணமாக மற்றவர்களுக்கு இருந்து வந்தார் அவர் எப்பொழுதும் வீரர்கள் உடல் தகுதியுடன் இருப்பதை உறுதி செய்வார் தகுதி கலாச்சாரத்தில் ஒழுக்கத்தை உருவாக்கினார் அந்த சூழ்நிலையை அணிக்குள் கொண்டு வந்தார் என்று அவர் கூறியிருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை