அர்ஷ்தீப் சிங் அடித்து நொறுக்கிய அந்த ஸ்டெம்ப்ஸ் விலை இவ்வளவு லட்சமா? – சமூக வலைதளத்தில் பரவும் செய்தி.
ஐபிஎல் 2023 க்கான 31 லீக் போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்க்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பௌலிங்கை தேர்வு செய்தார். பஞ்சாப் அணியின் தொடக்க அட்டகரர்கள் மும்பை அணியின் பௌலிங்க
ஐபிஎல் 2023 க்கான 31 லீக் போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்க்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பௌலிங்கை தேர்வு செய்தார். பஞ்சாப் அணியின் தொடக்க அட்டகரர்கள் மும்பை அணியின் பௌலிங்கை எளிதாகவே சமாளித்து வந்தனர். 16 வது ஓவரை வீசிய அர்ஜூன் டெண்டுல்கர் வீசிய ஓவரில் 31 ரன்களை வாரி வழங்கினார். பஞ்சாப் இதை பயன்படுத்தி கொண்டு ரன்களை குவிக்க ஆரம்பித்தது. 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களை குவித்தது.
215 ரன்களை எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய இஷான் கிஷன் 1 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். கேப்டன் என்ற பொறுப்பில் சில சிக்சர்கள் மற்றும் பவுண்டரிகளை அடித்து ரன்களை உயர்த்தி வந்தார்.சூர்யகுமாருடன் க்ரீன் இணைந்து அதிரடியாகவே விளையாடி அரை சதத்தை பூர்த்தி செய்தார். இந்த வருடம் ஐபிஎல்லில் சொதப்பி வந்த சூர்யகுமார் யாதவ் 23 பந்துகளில் 50 ரன்களை பூர்த்தி செய்தார். அணிக்கு நம்பிக்கையாக இருந்த சூர்யகுமார் 57 ரன்களில் வெளியேற அணிக்கு இருந்த நம்பிக்கையும் போனது.20 வது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் பஞ்சாப் அணிக்கு வெற்றியை பெற்று தந்தார். இறுதியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தோல்வியை தழுவியது.
ஐபிஎல்லில் சிறந்த போட்டி ஒன்று நேற்று நடைபெற்றது. அதில் மும்பை அணியும் மற்றும் பஞ்சாப் அணியும் மோதின, இப்போட்டியில் தான் இந்த சம்பவம் நடைபெற்றது. 20வது ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற நிலையில் பந்து வீச வந்தார் அர்ஷ்தீப் சிங். முதல் பந்தில் ஒரு ரன்னை மட்டுமே கொடுத்தார், அனைவரும் வெற்றி மும்பை அணிக்கு தான் என்று இருந்த நிலையில், ஆட்டத்தை மாற்றும் பந்தை வீசி ஸ்டெம்பை உடைத்தெறிந்தார். அதற்கு பின் வீசிய பந்தில் மேலும் ஒரு ஸ்டெம்பை உடைத்து, மும்பை அணிக்கு இருந்த வெற்றி வாய்ப்பையும் உடைத்தார் அர்ஷ்தீப் சிங்.
ARSHDEEP SINGH – BREAKING STUMPS FOR FUN 🔥pic.twitter.com/NNVlKWppaC
— Johns. (@CricCrazyJohns) April 22, 2023
இந்த ஸ்டேம்ப்பின் விலை பற்றி தான் இணையத்தில் செய்தி பரவி வருகிறது. அர்ஷ்தீப் சிங் 20 வது ஓவரை வீசி மும்பை அணியின் கையில் இருந்த வெற்றியை ஸ்டேம்ப்பின் மூலம் உடைத்தெறிந்தார். அதன் பிறகு புது ஸ்டெம்ப் கொண்டு வரப்பட்டு போட்டி நடத்தப்பட்டது. அதற்க்கு அடுத்த பந்திலே அதையும் உடைத்து மும்பை அணிக்கு இருந்த வெற்றி வாய்ப்பையும் உடைத்து பஞ்சாப் அணியை வெற்றி பெற செய்தார். பஞ்சாப் அணி 13 ரன்கள் வித்தியசத்தில் மும்பை அணியிடம் வெற்றி பெற்றது. ஸ்டம்பின் விலை தோரயமாக 25 லட்சம் எனவும் அர்ஷ்தீப் சிங் இரண்டு முறை உடைத்த ஸ்டம்பின் விலை 50 இருக்கும் எனவும் கூறப்படுகிறது.