நீங்கள் எல்லாம் எங்களை கிண்டல் பண்ணலாமா??பாகிஸ்தான் ரசிகர்களை சாடிய இர்பான் பதான்.
இந்திய அணியின் இளம் படை u19 உலகக்கோப்பையில் விளையாடியது. அதில் முதல் போட்டியில் இருந்து அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவியது. நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 79 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை
இந்திய அணியின் இளம் படை u19 உலகக்கோப்பையில் விளையாடியது. அதில் முதல் போட்டியில் இருந்து அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவியது. நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 79 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவி இருந்தது.இதனை பாகிஸ்தான் ரசிகர்கள் சில விமர்சித்து இருந்தனர். அதற்க்கு இர்பான் பதான் பதிலடி கொடுத்து இருந்தார்.
இந்த இறுதிப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து இருந்தது. ஆரம்பத்தில் நிதானமாக விளையாடி இருந்தாலும் அதன் பின் தங்களது ஆட்டத்தை காட்டி சிறப்பாக விளையாடி வந்தனர். 50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்களை குவித்து இருந்து. அதன் பின் பேட்டிங் செய்த இந்திய அணி 43.5 ஓவர்களில் 174 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதில் பாகிஸ்தான் ரசிகர்கள் இந்திய அணியை விமர்சனம் செய்து மகிழ்ந்து வந்தனர். இது குறித்து இர்பான் பதான் சில கருத்துக்களை அவர் முன்வைத்தார். “அவர்களின் U19 அணி இறுதிப் போட்டிக்கு வரவில்லை என்றாலும், எல்லைக்கு அப்பால் உள்ள விசைப்பலகை வீரர்கள் நமது இளைஞர்களின் தோல்வியில் மகிழ்ச்சி அடைகிறார்கள். இந்த நெகடிவ் அணுகுமுறை அவர்களின் தேசத்தின் மனநிலையை மோசமாகப் பிரதிபலிக்கிறது என்று அவர் கூறி இருந்தார்.
தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் கூறுகையில், சிறுவர்களைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன், அவர்கள் நன்றாக விளையாடினர். போட்டி முழுவதும் நல்ல சண்டை குணத்தை வெளிப்படுத்தினர். இன்று நாங்கள் சில மோசமான ஷாட்களை விளையாடினோம், நடுவில் நேரத்தை செலவிடவில்லை. நாங்கள் தயாராக இருந்தோம், ஆனால் திட்டங்களைச் செயல்படுத்த முடியவில்லை. இந்த போட்டியில் இருந்து நிறைய கற்றல், துணை ஊழியர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டது மற்றும் விளையாட்டுகளின் போது கூட.
நாங்கள் தொடர்ந்து கற்றுக்கொண்டு சிறப்பாக இருக்க முயற்சிப்போம். என்றும் அவர் கூறி இருந்தார். இந்திய U-19 கேப்டன் உதய் சஹாரன் 2024 U-19 உலகக் கோப்பையில் அதிக ரன்களை எடுத்த வீரராக முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.