IPL தொடக்க விழாவில் தோனியின் பாதங்களை தொட்ட அரிஜித் சிங் | ரசிகர்களை நெகிழவைத்த காட்சி.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பாத்து காத்துக்கொண்டிருந்த ஐபிஎல் தற்போது கோலாகலமாக தொடங்கி உள்ளது . நேற்று தொடங்கிய முதல் ஆட்டம் ஐபிஎல் 16வது சீசனின் முதல் ஆட்டம் குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கடந்த ஆண்டு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மகேந்திர சிங் தோனி தல

By ·

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பாத்து காத்துக்கொண்டிருந்த ஐபிஎல் தற்போது கோலாகலமாக தொடங்கி உள்ளது . நேற்று தொடங்கிய முதல் ஆட்டம் ஐபிஎல் 16வது சீசனின் முதல் ஆட்டம் குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கடந்த ஆண்டு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச முடிவு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த சென்னை 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. பின்னர் 179 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி தொடக்கத்திலேயே பெரிய அளவில் ஷாட்டுகளை அடித்து நாலாபுறமும் பந்துகளை பறக்க விட்டது.இந்நிலையில் ஐபிஎல் முதல் போட்டி தொடங்கும் முன், ஐபிஎல் தொடக்க விழா தொடங்கியது. இவ்விழாவில் பாலிவுட் நடிகர், நடிகைகள் பலர் மைதானத்தின் நடுவே சிறகு விரித்தனர்.

அரிஜித் சிங்:

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஐபிஎல் தொடக்க விழா நடைபெற்றது, இதில் பாலிவுட் நட்சத்திரங்கள் தங்கக்குடைய நடன திறமைகளினால் ரசிகர்களின் மதனை சூறையாடினர். அதிலும் ராஷ்மிகா மந்தனா நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடினார், அதனை தொடர்ந்து தமன்னா மால டும் டும் பாடலுக்கு நடனமாடினார். இவர்களை தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரகபலமான பாடகரான அரிஜித் சிங் பாடல்களை பாடினார்.

தோனியின் பாதங்களை அரிஜித் சிங் தொட்டார் :

அரிஜித் சிங் தன்னுடைய மிருதுவான குரலில் பாடல்களைப் பாடி அங்குள்ள பார்வையாளர்களைக் கவர்ந்தார். அரிஜித் சிங் தனக்குப் பழக்கமான பாணியில் பாடல்களைப் பாடி அனைவரின் மனதையும் வென்றார். இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்ததும் அவரை சந்திக்க மகேந்திர சிங் தோனி மேடைக்கு வந்தார். மகேந்திர சிங் தோனி மேடைக்கு வந்ததும், அரிஜித் சிங் அவரது கால்களைத் தொட்டு வாங்கினார். இதனை பார்த்த ரசிகர்கள் ஆராவாரம் செய்து மகிழ்த்தனர்.

வீடியோவில் அர்ஜித் சிங் அவரது கால்களைத் தொட்டவுடன், தோனி அவரது கால்களைத் தொட மறுத்துவிட்டார். அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் படு பயங்கரமாக வைரலாகி வருகிறது. இந்நிலையில் நேற்றைய சிஎஸ்கே மற்றும் ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனி முதல் போட்டியில் எட்டாவது இடத்தில் பேட்டிங் செய்தார், அவர் வந்தவுடன், அவர் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 200 ஸ்டிரைக் ரேட்டில் 14 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் ஆனாலும் சென்னை அணி 5 விகெட்டுகள் இழப்பிற்கு தோற்றுவிட்டது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை