ரோஹித் அடித்த சிக்ஸர் மகிழ்ச்சியில் டக் அவுட்டில் அம்பயராக மாறிய அர்ஜுன் டென்டுல்கர் – வீடியோ உள்ளே.
ஐபிஎல் 2023 தொடரில் இன்று நடந்த 16வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டன. இப்போட்டியானது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பௌலிங் போட முடிவு செய்தது. அது அவர்களுக்கு ச
ஐபிஎல் 2023 தொடரில் இன்று நடந்த 16வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டன. இப்போட்டியானது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பௌலிங் போட முடிவு செய்தது. அது அவர்களுக்கு சரியான முடிவு தான் என்று பிறகு தான் அவர்களுக்கு தெரிந்தது.
இந்நிலையில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் ப்ரித்வி ஷா 10 பந்துகளில் 15 ரன்களை மட்டுமே அடித்து ஹ்ரிதிக் சோக்கினிடம் விக்கெட்டை பறி கொடுத்து மீண்டும் டெல்லி அணிக்கு ஏமாற்றத்தை அளித்தார். அதற்கு பிறகு வந்தவர்களும் சரியாக ஆடாத நிலையில் டேவிட் வார்னர் மற்றும் அக்சர் பட்டேல் இருவரும் இணைந்து நல்ல பேட்டிங் செய்து அரை சதம் அடித்தார்கள். முடிவில் டெல்லி அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில் 173 என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினர். இருவரும் இணைந்து 36 பந்துகளில் 68 ரன்களை பூர்த்தி செய்தனர். இந்த நிலையில் இஷான் கிஷன் 26 பந்துகளில் 31 ரன்களை அடித்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் 50 ரன்களை கடந்தார். கடந்த 26 போட்டிக்கு பின், இந்த சீசனில் தான் அரை சதத்தை பதிவு செய்தார் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா.
ரோகித் சர்மாவுடன் இணைந்த அதிரடி ஆட்டக்காரரான திலக் வர்மாவும் இனைந்து டெல்லி அணியின் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தினர்.திலக் வர்மா 4 சிக்சர்கள் மற்றும் 1 பவுண்டரியை அடித்திருந்த நிலையில் 41 ரன்களில் முகேஷ் குமாரிடம் விக்கெட்டை இழந்தார். அதன் பின் வந்த சூர்யகுமார் யாதவ் 0 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.அதன் பின் அணியின் கேப்டன் ரோகித் சர்மா 45 பந்துகளில் 65 ரன்களை அடித்த நிலையில் மூஸ்தபிசூர் ரஹிமிடம் விக்கெட்டை இழந்தார்.
— Ninja (@IPLcskMSD) April 12, 2023
ஆனாலும் மும்பை அணி எப்படியோ வெற்றியடைந்து விட்டது. இந்நிலையில் இந்த போட்டியில் ரோஹித் சர்மா ஆடிக்கொண்டிருக்கும் போது அவர் அடிக்கும் ஒவ்வொரு சிக்ஸர்களுக்கும் அம்பயர் போல தன்னுடைய சைகை காட்டி கொண்டாடினார் அர்ஜுன் டெண்டுல்கர். அந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சொல்லப்போனால் டந்த 2018ஆம் ஆண்டு 19 வயதிற்கு உட்பட்டோர் உலகக்கோப்பை தொடரில் இந்தியா அணிக்காக விளையாடினார்.
அதோடு பல உள்ளூர் விளையாட்டு போட்டிகளிலும் விளையாடி வருகிறார். ஒரு ஆல்ரவுண்டராக சிறப்பான விளையாட்டை கொடுக்கும் சச்சின் டெண்டுல்கர் அவரது அப்பா இருந்த னையான மும்பை இந்தியன்ஸ் அணியில் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். ஆனால் இவருக்கு வாய்ப்பு என்பதனை மும்பை இந்தியன்ஸ் இனனும் கொடுத்த பாடில்லை. அப்படியொரு நிலையில் தான் ரோஹித் சிக்ஸர் அடித்த போது அர்ஜுன் டெண்டுல்கர் அப்படி சைகை செய்தது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.