ஐபிஎல் ஆட்டத்தை அதிரடியாக தொடங்கிய அர்ஜுன் டெண்டுல்கர் – வீடியோ உள்ளே.

இந்தியன் பிரீமியர் லீக்கில் 2023 தொடரில் நேற்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையேயான போட்டி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச முடிவு செய்தார். ஆனால் அது சரியான ம

By ·

இந்தியன் பிரீமியர் லீக்கில் 2023 தொடரில் நேற்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையேயான போட்டி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச முடிவு செய்தார். ஆனால் அது சரியான முடிவாக தெரியவில்லை. ஏனெனில் குஜராத் அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தனர்.

இந்த போட்டியின் போது மும்பை அணியின் பந்துவீச்சாளர் அர்ஜுன் டெண்டுல்கருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட அவர் சிறப்பாக பந்துவீசினார். மேலும் இந்த போட்டி அர்ஜுன் டெண்டுல்கரின் நான்காவது போட்டியாகும். அதே சமயம் பேட்டிங்கிலும் அர்ஜுன் டெண்டுல்கர் தன்னுடைய முதல் ஐபிஎல் சிக்ஸர் மற்றும் ரன்களை விளாசினார். அந்த வீடியோ தன தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகிவருகிறது.

சச்சின் மகன் அர்ஜுனுக்கு மூன்று வருட காத்திருப்புக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. கடந்த மூன்று போட்டிகளில், அர்ஜுன் அற்புதமான பந்துவீச்சு திறமையை வெளிப்படுத்தினார். ஆனால் பஞ்சாபிற்கு எதிரான ஆட்டத்தில் ஒரே ஓவரில் 31 ரன்களை வாரி வழங்கினார். அது மும்பை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது இருந்த போதிலும் ரோஹித் ஷர்மா அர்ஜுனின் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளார்.

நேற்றிரவு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக பேட்டிங்கிலும் ஆக்ரோஷமாக விளையாட விருப்பம் தெரிவித்தார் அர்ஜுன். அவர் குஜராத்தின் மூத்த பந்துவீச்சாளர் மோகித் சர்மாவின் பந்தில் அற்புதமான ஒரு சிக்ஸரை விளாசினார். எண்-8 இல் பேட்டிங் செய்ய வந்த அர்ஜுன் தனது இன்னிங்ஸை மெதுவாகத் தொடங்கினார் ஆனால் மோஹித் ஷர்மாவின் பவுன்சர் பந்திற்கு எதிரான ஆட்டத்தின் கடைசி ஓவரில், அவர் டீப் ஸ்கொயர் லெக் திசையில் பெரிய சிக்ஸரை அடித்தார்.

அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு முன் அர்ஜுன் ஐபிஎல்லில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் அவர் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். அவர் 2 ஓவரில் 9 ரன்களை மட்டுமே கொடுத்த குஜராத் அணியின் விகேட்கேப்பார் விருத்திமான் சாஹாவின் விக்கெட்டை கைப்பற்றினார் என்பது குறிப்பிடதக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை