“நீ அதை மட்டும் செய்” அர்ஜுனுக்கு சச்சின் கொடுத்த அட்வைஸ் – அர்ஜுன் டெண்டுல்கர் நெகிழ்ச்சி பேட்டி.
ஐபிஎல் 2023 இன் 25வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையே ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற நிலையில் மும்பை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை தோற்கடித்தது. மும்பை அணியின் வெற்றிக்கு அர்ஜுன் டெண்டுல்கர் முக்கிய பங்கு வகித்தார். வெற்றிக்
ஐபிஎல் 2023 இன் 25வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையே ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற நிலையில் மும்பை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை தோற்கடித்தது. மும்பை அணியின் வெற்றிக்கு அர்ஜுன் டெண்டுல்கர் முக்கிய பங்கு வகித்தார். வெற்றிக்குப் பிறகு அர்ஜூன் பேசுகையில் உணர்ச்சி போர்வமான சிலவற்றை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
அர்ஜுன் டெண்டுல்கர் கூறியது :
என்னுடைய முதல் ஐபிஎல் விக்கெட்டை வீழ்த்துவது என்பது மகிழ்ச்சியாக இருந்தது. நான் செய்ய வேண்டியதெல்லாம் நான் தொடக்கத்தில் என்ன செய்ய திட்டம் போட்டேனோ அதை மட்டும் தான். வைட் பந்துகளை வீசி லாங் பவுண்டரிகளை அடிக்க வைப்பது தான் எங்களின் திட்டம். அதனால் பேட்ஸ்மேன் லாங் சைடில் மட்டும் தான் அடிக்க முடியும். எனக்கு பந்துவீசுவது மிகவும் பிடிக்கும், கேப்டன் கூறும்போது பந்துவீசுவதில் நாம் மகிழ்ச்சி அடைகிறேன் என்றால்.
மேலும் பேசிய நாங்கள் அர்ஜுன் டெண்டுல்கர் என்னுடைய அப்பாவும் நானும் கிரிக்கெட்டைப் பற்றி அதிகம் பேசுவோம். விளையாட்டுகளுக்கு முன் வியூகத்தைப் பற்றி விவாதிப்போம், ஒவ்வொரு விளையாட்டிற்கும் நான் பயிற்சி செய்ய வேண்டும் என்று அப்பா என்னிடம் கூறுகிறார். நான் எனது பந்துவீச்சில் வெளியீட்டில் கவனம் செலுத்தினேன். சரியான நீளத்திலும் லைனிலும் பந்து வீச முயற்சி செய்தேன். அது ஸ்விங் ஆனால் நமக்கு கிடைத்த போனஸ், இல்லை என்றால் அடுத்த முறை சரியாக வீச வேண்டும் என்றார் அர்ஜுன் டெண்டுல்கர்.
அர்ஜுன் முதல் விக்கெட் :
இந்நிலையில் ஹைதராபாத்ற்கு எதிராக கடைசி ஓவரை வீச வந்த அர்ஜுன் டெண்டுல்கர் ஹைதராபாத்தை 178 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார். ஐபிஎல் தொடரின் முதல் விக்கெட்டையும் கைப்பற்றினார். அவரது முதல் ஐபிஎல் போட்டிகளின் பலி புவனேஷ்வர் குமார். இந்த கடைசி ஓவரில் அர்ஜுன் அற்புதமாக பந்து வீசினார். கடைசி ஓவரில் 4 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். அதே சமயம் போட்டி முழுவதும் 2.5 ஓவர்கள் வீசி 18 ரன்களுக்கு 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
Three wins in a row for the @mipaltan as they beat #SRH by 14 runs to add two key points to their tally.
— IndianPremierLeague (@IPL) April 18, 2023
Scorecard – https://t.co/oWfswiuqls #TATAIPL #SRHvMI #IPL2023 pic.twitter.com/asznvdy1BS
அர்ஜுன் டெண்டுல்கர் பல வருடங்க்ளாக மும்பை அணியில் இருந்தும் கடந்த KKR vs MI போட்டியில் தான் அறிமுகமானர். அந்த போட்டியில் அர்ஜுன் 2 ஓவர்கள் வீசினார் ஆனால் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. இந்த நிலையில் தான் தன்னுடைய முதல் விக்கெட்டை எடுத்துள்ளார் அர்ஜுன். இது மும்பை ரசிகர்களுக்கும் சரி, அவரின் தந்தை சச்சின் டெண்டுல்கருக்கு சரி ஒரு பெருமைக்குரிய மகிழ்ச்சியான தருணம் என்றே சொல்லலாம்.