31 ரன்களை வாரி வழங்கிய அர்ஜுன் டெண்டுல்கர் – ட்விட்டரில் கொந்தளிக்கும் ரசிகர்கள்.
ஐபிஎல் 2023 க்கான 31 லீக் போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்க்ஸ் அணியும் மோதி வருகின்றனர். டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பௌலிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணியின் தொடக்க அ
ஐபிஎல் 2023 க்கான 31 லீக் போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்க்ஸ் அணியும் மோதி வருகின்றனர். டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பௌலிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணியின் தொடக்க அட்டகரர்கள் ஷார்ட் மற்றும் ப்ரப்சிம்ரன் மும்பை அணியின் பௌலிங்கை எளிதாகவே சமாளித்து வந்தனர். இருப்பினும் ஷார்ட் 11 ரன்களிலே அவுட்டாகி வெளியேறினார்.
6 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 58 ரன்களை எடுத்திருந்தனர். இந்நிலையில் பந்து வீச வந்தார் அர்ஜூன் டெண்டுல்கர், ப்ரப்சிம்ரனின் 26 ரன்களை எடுத்திருந்த நிலையில் அவரது விக்கெட்டை எடுத்து ஐபிஎல்லில் இரண்டாவது விக்கெட்டை பதிவு செய்தார். ரன்ரேட் குறைந்து கொண்டு வந்த நிலையில் லிவிங்க்ஸ்டன் பெரிய ஷாட் அடிக்க முயன்ற போது இஷான் கிஷனிடம் ஸ்டெம்பிங் மூலம் விக்கெட்டை இழந்தார்.
அதன் பின் மும்பை அணியின் ஆதிக்கமே பெரிதாக இருந்தது. ஆனால் அதன் பின் அர்ஜூன் டெண்டுல்கர் வீசிய ஓவரில் 31 ரன்களை வாரி வழங்கினார். பஞ்சாப் இதை பயன்படுத்தி கொண்டது ரன்களை குவிக்க ஆரபித்து. பாட்டிய 28 பந்துகளில் 41 ரன்களை குவித்த நிலையில் அவுட்டாகி வெளியேறினார். ஆர்ச்சர் ஓவர்ளில் அடித்து விளையாடிய கேப்டன் சாம் கரண் 25 பந்துகளிலே அரை சதத்தை பூர்த்தி செய்தார்.
— Ninja (@IPLcskMSD) April 22, 2023
அதே ஓவரில் சாம் கரண் விக்கெட்டை இழந்து வெளியேறினார். வந்த அனைத்து பேட்ஸ்மேன்கள் அனைவரும் அற்புதமாக விளையாடினர். 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களை குவித்தது.இந்நிலையில் மும்பையின் 16வது ஓவரை வீச வந்தவர் அர்ஜுன் டெண்டுல்கர். ஆனால் கடந்த போட்டிகளை விட இந்த போட்டியில் மோசமாக ரன்களை கொடுத்தார். அது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர் போட்ட ஓவரில் மட்டுமே 31 ரன்கள் கொடுத்தார். அதில் ஒரு நோ பாலும் அடங்கும். இதனால் கோபமடைந்த மும்பை ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.
அர்ஜுன் டெண்டுல்கர் ஐபிஎல் போட்டியை பொறுத்தவரையில் கொல்கத்தாவுக்கு எதிராக முதல் போட்டியில் விளையாடினார், ஆனால் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியவில்லை. ஆனால் அவரது இரண்டாவது போட்டியில் அவர் கடைசி ஓவரில் ஒரு விக்கெட்டை எடுத்து கொடுத்தார். இந்தப் போட்டி ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற நிலையில் இரண்டாவது விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.