ஐசிசி பல் இல்லாத புலியாகிருச்சு – கடுமையாக விமர்சித்த அர்ஜுனா ரணதுங்கா
அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக தற்போது ஆசிய கோப்பை போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூலம் உலக கோப்பை போட்டியில் விளையாடும் ஆசிய அணிக்கு நல்ல ஒரு பயிற்ச்சியாக இருக்கும்
அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக தற்போது ஆசிய கோப்பை போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூலம் உலக கோப்பை போட்டியில் விளையாடும் ஆசிய அணிக்கு நல்ல ஒரு பயிற்ச்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த தொடரில் முதலில் இதே ஆதிக்கம் செழித்தி வந்தது இந்திய அணி.
அதன் காரணமாக இந்தியா முதல் ஆளாக ஆசிய கோப்பை 2023 தொடரின் இறுதி போட்டிக்கு சென்றது. இதனையடுத்து பாகிஸ்தான் அணியை வீழ்த்திய இலங்கை அணி வரும் செப்டம்பர் 17ஆம் தேதி மாபெரும் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக ஆசிய கோப்பை 2023 நடத்துவதில் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. குறிப்பாக இந்தியா பாகிஸ்தானில் விளையாட மறுப்பு தெரிவித்தது.
இதனால் பல முன்னாள் வீரர்கள் முதற்கொண்டு ரசிகர்கள் மத்தியிலும் விவாதம் ஏற்பட்டது. இறுதியாக இந்தியா பங்கேற்கும் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடைபெறும் என்று ஆசிய கவுன்சில் அறிவித்தது. ஆனாலும் அதிலும் ஒரு பிரச்சனை இருந்தது. அதாவது மழைக்காலம் என்று தெரிந்தும் இலங்கையில் நடத்தப்பட்ட இத்தொடரில் எதிர்பார்க்கப்பட்டது போலவே பெரும்பாலான போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டது.
ஆனால் அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிக்கு மோதிய போட்டிக்கு மட்டும் ஸ்பெஷலாக ஆசிய கவுன்சில் ரிசர்வ் நாள் அறிவித்தது. அதனால் நாங்கள் அவ்வளவு கேவலமாகா போய் விட்டோமா என்று சமூகவலைத்தளங்களில் இலங்கை மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் விமர்சித்தனர். இலங்கை முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணுதுங்கா சமீபத்திய பேட்டியில் இந்த விஷயம் குறித்து விமர்சித்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில் “ஆசிய கோப்பையில் விதிமுறைகள் இருக்கிறது. ஆனால் அவர்கள் விதிமுறைகளை மாற்றினார்கள். இங்கே ஆசிய கவுன்சில் மற்றும் ஐசிசி எங்கே இருக்கிறது? ஒரு அணிக்காக நீங்கள் விதிமுறைகளை மாற்றினால் அது எனக்கு சரியாக தோன்றவில்லை. இதனால் நீங்கள் வருங்காலத்தில் இன்னும் மோசமான நிகழ்வுகளை பார்ப்பீர்கள். இங்கே ஐசிசி மற்றும் ஆசிய கவுன்சில் தங்களின் இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக அமைதியாக இருப்பதை பார்த்து நான் வருத்தமடைகிறேன்
அதே போல பணத்திற்காக முன்னாள் வீரர்களும் இந்த விஷியத்தை பற்றி எதுவும் பேசுவதில்லை. இங்கே ஐசிசி பல் இல்லாத புலியாகியுள்ளது. கிரிக்கெட்டை பாதுகாக்க வேண்டிய அவர்கள் நியாயமாக நடந்து கொள்ளவில்லை. மேலும் கிரிக்கெட்டை ஐசிசி கட்டுப்படுத்த வேண்டுமே தவிர ஒரு நாடு கட்டுப்படுத்த கூடாது. இங்கே இந்தியா அதிகாரத்தைக் கொண்டிருப்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதற்கு ஐசிசி அதிகாரிகளும் மிடுக்கான உடைகளை அணிந்து கொண்டு சம்மதம் தெரிவிக்கிறார்கள் என்று விமர்சித்துள்ளார்.