“இதுதான் என்னுடைய கடைசி பிறந்தநாள் வாழ்த்து” வெறுப்பாக தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அஸ்வின் – காரணம் என்ன தெரியுமா?

எம்.எஸ் தோனி உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். அதற்கு முக்கியமான காரணமே ஒரு ஓவரில் 25 ரன்கள் தேவைப்பட்டாலும் சரி, பந்து வீசிக்கொண்டிருக்கும் போது கடைசி 2 பந்தில் 1 ரன்களும் அதுவும் பாகிஸ்தானுக்கு இடையே நடக்கும் போட்டியாக இருந்தாலும் சரி அந்த அழுத்தமான சூழ்நிலையிலும் சிறப

By ·

எம்.எஸ் தோனி உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். அதற்கு முக்கியமான காரணமே ஒரு ஓவரில் 25 ரன்கள் தேவைப்பட்டாலும் சரி, பந்து வீசிக்கொண்டிருக்கும் போது கடைசி 2 பந்தில் 1 ரன்களும் அதுவும் பாகிஸ்தானுக்கு இடையே நடக்கும் போட்டியாக இருந்தாலும் சரி அந்த அழுத்தமான சூழ்நிலையிலும் சிறப்பாக செயல்ப்ட்டு அணிக்கு வெற்றியை தேடி கொடுப்பார். மேலும் இவரது தலைமையில் இந்திய அணி டி20, ஒருநாள் போட்டி, சாம்பியன் ஷிப் என மூன்று உலக கோப்பைகளை வென்றுள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்கு கேப்டனாக விளையாடி 5 கோப்பைகளையும் சென்னை அணிக்கு பெற்று தந்திருக்கிறார். மேலும் ஐபிஎல் வரலாற்றில் 14 சீசன்கள் விளையாடியுள்ள சென்னை அணியை 12 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்து சென்றிருக்கிறார். தோனி பேட்டிங் மட்டுமல்லாமல் விக்கெட் கீப்பிங்கிலும் கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்டெம்புகளை அடிக்கும் திறமையிலும், DRS எடுப்பதிலும் இவருக்கு இணை இவரே.

தோனி புறந்தநாள் :

இந்நிலையில் இப்படி பல திறமைகள் கொண்ட கேப்டனான எம்.எஸ்.தோனிக்கு நேற்று பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாளில் பல நாடுகளை சேர்ந்த வீரர்களும், பல இந்திய அணியின் முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் வாழ்த்துகளை கூறினார்கள். மேலும் வாழ்த்து கூறத்தவர்களின் மீது விமர்சனங்களும் சோசியல் மீடியாவில் எழுந்தன. இதனிடையே தான் அஸ்வின் ஒரு சர்ச்சையான ட்விட் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

அஸ்வின் ட்விட் பதிவு :

அந்த பதிவில் “இந்த ஜூலை 7ஆம் தேதி நான் சிறந்த ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லாமல் மற்ற விஷியங்களுக்கு ட்விட் செய்தால் பெரிய கலவரத்தில் மாட்டிக்கொள்வேன். அதனால் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மகேந்திர சிங் தோனி என்றார் அஸ்வின். மேலும் அந்த பதிவில் அஸ்வின் கூறியதாவது “நான் பலருக்கும் ஒன்றை சொல்கிறேன். ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்து ட்விட்டர் பக்கத்தில் நான் கூறுவது இதுவே கடைசி முறையாகும்.

ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற வேண்டும் என்றால் தனிப்பட்ட முறையில் அவருக்கு தொலைபேசியில் அழைத்து கூறுவதோ, அல்லது நேரில் அழைத்து பிறந்தநாள் வாழ்த்து கூறுவதோ தான் என்னுடைய வழக்கமானதாக இருந்து வருகிறார். அதன் தான் நான் பின்பற்றுகிறேன். நான் ஒருவருக்கு வாழ்த்து கூறவில்லை என்று அவருக்கும் எனக்கும் பிரச்னை என்று வதந்தியை கிளப்பும் சிலருக்கு இந்த விஷியத்தை நான் குறிப்பிடுகிறேன் என்று பதிவிட்டுள்ளார் அஸ்வின்.

அஸ்வின் இந்தியாவின் நவீன கிரிக்கெட்டில் சிந்த பந்துவீச்சாளராவார். டெஸ்ட் போட்டிகளில் நம்பர் ஒன் பந்துவீச்சாளர் என்ற பெருமையும் அஸ்வினுக்கு இருக்கிறது. ஆனால் கடந்த உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் அஸ்வின் இடம்பெறவில்லை. அதே போல உலக கோப்பையிலும் இடம் பெற வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது. இதனிடையே தான் அஸ்வின் போட்ட இந்த பதிவானது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை