அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் சாதனையை முறியடித்த அஸ்வின் – அடுத்து கபில் தேவ் தான்.
சமீபத்தில் பல போட்டிகள் கொண்ட IND vs WI தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் அஸ்வின். உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது நம்பர் 1 பந்துவீச்சாளராக இருப்பவர் ரவிச்சந்திரன் அஸ்வின். பல முக்கியமான போட்டிகளில் முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வெ
சமீபத்தில் பல போட்டிகள் கொண்ட IND vs WI தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் அஸ்வின். உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது நம்பர் 1 பந்துவீச்சாளராக இருப்பவர் ரவிச்சந்திரன் அஸ்வின். பல முக்கியமான போட்டிகளில் முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வென்றியடைய பெரும் பங்காற்றி இருக்கிறார். ஆனால் அஸ்வின் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் இடம்பெறவில்லை. இத்ற்கு பலரும் அதிர்ப்தி தெரிவித்தனர்.
ஆனால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தேர்வாகி முதல் போட்டியிலேயே பல வகையான சாதனைகளை அஸ்வின் படைத்தார். டெஸ்ட் போட்டியில் அப்பா மற்றும் மகன் விக்கெட்டை எடுத்தது, டெஸ்ட் போட்டியில் 700 விக்கெட்டுகளை கடந்தது. ஒரே போட்டியில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியது, இரண்டு இணங்கிலுமே 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது. என பல சாதனைகளை அஸ்வின் முதல் போட்டியிலேயே படைத்தது இன்னும் தன்னால் இந்தியாவிற்காக சிறப்பாக செயல்பட முடியம் என்பதை நிரூபித்துள்ளார்.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியானது தொடங்கிய நிலையில் முதல் இன்னிங்கில் ஒரு விக்கெட் வீழ்த்தினார். ஆனால் இரண்டாவது இன்னிங்கில் சிறப்பாக செயல்பட்ட அஸ்வின் முக்கியமான நேரத்தில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரு புதிய சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்.
அதாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக கபில்தேவ் 89 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவருக்கு அடுத்ததாக அணில் கும்ப்ளே 74 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் இருந்த நிலையில் தான் நேற்று நாங்காவது நாள் போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் அஸ்வின் 75 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அஸ்வின் இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு மூன்று ஆண்டுகள் விளையாட இருக்கும் வேளையில் கபில் தேவின் சாதனையை தகர்க்கவும் அவருக்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும் மற்றொரு சாதனையாக இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங்கை பின்னுக்கு தள்ளி சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அதாவது இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளராக அணில் கும்ப்ளே 956 விக்கெட் எடுத்து முதல் இடத்தில் உள்ளார்.
அவரை தொடர்ந்து ஹர்பஜன் சிங் 711 விக்கெட்கள் எடுத்து இரண்டாவது இடத்தில் இருந்தார். இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் அஸ்வின் தற்போது ஹர்பஜன் சிங் சாதனையை பின்னுக்கு தள்ளி 712 விக்கெட்களுடன் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளராக இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இவர்களை தொடர்ந்து நான்கு மற்றும் ஐந்து இடத்தில் கபில் தேவ் மற்றும் ஜாஹீர் கான் ஆகியோர் உள்ளனர்.