500வது விக்கெட்டை வீழ்த்திய சில மணி நேரங்களில் அஷ்வினுக்கு வந்த அதிர்ச்சி. டெஸ்ட் போட்டியில் பாதியில் கிளம்பிய அஷ்வின். சோகத்தில் ரசிகர்கள். காரணம் என்ன தெரியுமா??
500வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்த சில மணி நேரங்களில் ஏற்பட்ட சோகம். இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டியில் இரண்டில் 1 - 1 என்ற கணக்கில் இரு அணிகளும் தொடரை சமன் செய்துள்ளது. மூன்றாவது போட்டியானது நேற்று முன் தினம் ராஜ்கோட் மைதானத்தில் தொட
500வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்த சில மணி நேரங்களில் ஏற்பட்ட சோகம். இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டியில் இரண்டில் 1 – 1 என்ற கணக்கில் இரு அணிகளும் தொடரை சமன் செய்துள்ளது. மூன்றாவது போட்டியானது நேற்று முன் தினம் ராஜ்கோட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் இந்திய அணிக்கு பெரிய அடியாக முதல் செஷன்னில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி இருந்தது.
இந்திய அணியில் சார்பில் ஆரம்பத்திலே ஜெய்ஸ்வால் 10 ரன்களிலும் கில் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்து வெளியேறினார்.அதன் பின் படிதாரும் 5 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் சிறப்பாக விளையாடி வந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 131 ரன்களிலும் அறிமுக நாயகன் சர்ப்ராஸ் கான் 62 ரன்ககளிலும் ஆட்டமிழந்தனர். குல்தீப் 4 ரன்களிலும் ஜடேஜா 112 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 445 ரன்களை அடித்து இருந்தது.
அதன் பின் பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி வருகிறது. அதில் முதல் விக்கெட்டை (க்ராலி) வீழ்த்தி இருந்தார். அஷ்வின் அதன் மூலம் தனது 500வது டெஸ்ட் விக்கெட்டையும் அவர் பதிவு செய்து இருந்தார். அணில் குப்ம்ளேக்கு பிறகு 500வது விக்கெட்டை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். அது மட்டுமல்லாமல் முத்தையா முரளி தரனுக்கு பின் அதிவேகமாக 500 விக்கெட்டுகளை பதிவு செய்த இரண்டாவது வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றார்.
இந்த மகிழ்ச்சியான செய்தி வந்த சில மணி நேரங்களில் அஷ்வினுக்கு ஏற்பட்ட சோகம். அவரது அவசர குடும்ப சூழ்நிலை காரணமாக அவர் 3 வது டெஸ்ட் போட்டியில் இருந்து பாதியில் விலகினார்.இந்திய அணி அவர் இல்லாமல் அவருக்கு பதில் வேறு ஒரு வீரரை substuite வீரராக மற்று ஒரு வீரரை களமிறக்கும். இது இந்திய அனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவு தான். இங்கிலாந்து அணி நேற்றைய நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 209 ரன்களை குவித்துள்ளது. இத்தகைய நேரத்தில் அஷ்வின் விலகியது மிகப் பெரிய பின்னடைவு தான்
இதற்க்கு BCCI அஷ்வினுக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்து இருந்தது. அஷ்வினின் அம்மா தான் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார் என்றும் செய்திகள் தற்போது வெளியாகியுள்ளது.இது போன்ற நேரத்தில் இந்திய ரசிகர்கள் அஷ்வினின் அம்மா விரைவில் குணமடைந்து வர வேண்டுதலை மேற்கொண்டு வருகின்றனர்.