அணியில் இடம்பெறா விட்டாலும் ரசிகர்களின் மனதில் இடம்பெற்ற அஷ்வின். அணிக்காக அவர் செய்ததை பாருங்கள்!

ஐபிஎல் 2023 க்கான இறுதிப் போட்டி நிறைவடைந்த நிலையில் இந்திய அணி தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை விளையாடி வருகிறது. இந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது. இப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி தற்போது அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வருகி

By ·

ஐபிஎல் 2023 க்கான இறுதிப் போட்டி நிறைவடைந்த நிலையில் இந்திய அணி தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை விளையாடி வருகிறது. இந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது. இப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி தற்போது அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வருகிறது. இந்திய அணி ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கை சமளிக்க முடியாமல் ரன்களை வாரி வழங்கி வருகிறது.

இதே நிலை நீடித்து வந்தால் இந்திய அணிக்கு சவாலாக மாறிவிடும். வார்னர் 43 ரன்னிலும், மார்னஸ் லாபுசாக்னே 26 ரன்னிலும் அவுட்டாகி வெளியேறினர். முதல் நாள் முடிவில் அஸ்திரேலிய அணியின் அதிக பட்ச ரன்னாக ட்ராவிஸ் ஹெட் 156 பந்துகளிலே 146 ரன்களை குவித்தனர். ஸ்டீவ் ஸ்மித் 95 ரன்களை குவித்து அவுட்டகாமல் விளையாடி வருகின்றனர். இதே நிலை நீடித்து வந்தால் இந்திய அணிக்கு அது பெரும் சிக்கலை ஏற்படுத்திவிடும். இந்திய அணி கட்டாயம் விக்கெட் வீழ்த்தி மீண்டும் போட்டியில் முன்னேற வேண்டும்.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா யாரும் எதிர் பாரத நிலையில் பௌலிங்கை தேர்வு செய்தார். அதன் பிறகு அணியை அறிவித்த ரோஹித் ஷர்மா மைதானத்தின் தன்மையை பார்த்து நான்கு வேகபந்து வீச்சாளர் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளர் உடனே மட்டும் செல்வதாக கூறினார். அதாவது உலகின் தலை சிறந்த நம்பர் ஒன் டெஸ்ட் சுழற்பந்து வீச்சாளரை அஷ்வினை அணியில் எடுக்காமல் இருந்தார் ரோஹித் ஷர்மா.

இதனை கூறித்து பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள்எழுந்தன. அணியில் அஷ்வின் இல்லாதது இந்திய அணிக்கு மிக பெரிய பின்னடைவாக தான் இருந்து வருகிறது. அவர் அணியில் இடம் பெறாததைப் பற்றி பல்வேறு ஜாம்பவான்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது ரோஹித் ஷர்மா எடுத்த மிக பெரிய தவறு என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

இதைப் பற்றி ரிக்கி பாண்டிங் கூறுகையில் “ஆட்டம் செல்ல செல்ல பந்து நன்றாக திரும்பும் என்று நினைக்கிறேன். அப்போது அஷ்வின் ஆஸ்திரேலியா அணியின் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு சற்று சவாலாகவே இருந்து இருப்பார்” என்றும் அவர் கூறினார். இதற்கிடையில் அவர் முதல் நாள் போட்டியில் அஷ்வின் தண்ணீர் கொண்டு வந்து கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு சில ஆலோசனைகளை அவருக்கு வழங்கினார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.            

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை