வித்தியாசமாக ஆட்டமிழந்த பாக் வீரர்.. கோபமடைந்த பாபர் அசாம் – அஸ்வின் கொடுத்த விளக்கம்.
உலக கோப்பை 2023 தொடங்க இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 30 ஆம் தேதி பாகிஸ்தான் தலைநகர் கராச்சியில் கோலாகலமாக துவங்கியது. விரைவில் இந்தியாவில் நடைபெறும் 2023 ஐசிசி உலகக் கோப்பைக்கு ஆசிய அணிகள் தயாராகும் வகையில் 50 ஓவர் போட்டிகளாக
உலக கோப்பை 2023 தொடங்க இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 30 ஆம் தேதி பாகிஸ்தான் தலைநகர் கராச்சியில் கோலாகலமாக துவங்கியது. விரைவில் இந்தியாவில் நடைபெறும் 2023 ஐசிசி உலகக் கோப்பைக்கு ஆசிய அணிகள் தயாராகும் வகையில் 50 ஓவர் போட்டிகளாக நடக்கும் இத்தொடரின் முதல் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள பாகிஸ்தான் மற்றும் நேபாள் ஆகிய அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலில் பேட்டிங் செய்வதாக கூறினார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தானுக்கு பக்கார் ஜமான் 14 (20) ரன்களில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாக அடுத்த ஓவரிலேயே மற்றொரு தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் நேபாள் வீரர் ரோகித் பௌடலின் சிறப்பான ரன் அவுட்டால் 5 (14) ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
அதனால் 25/2 என்ற சுமாரான தொடக்கத்தை பெற்று தடுமாறிய பாகிஸ்தானுக்கு அடுத்ததாக கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் நிதானமாக விளையாடி சரிவை சரி செய்ய போராடினர். ஆனால் அப்போது சந்தீப் லமிசன்னே வீசிய 24வது ஓவரின் 4வது பந்தில் மிகவும் அருகிலேயே அடித்த முகமது ரிஸ்வான் வேகமாக சிங்கிள் எடுப்பதற்காக ஓடினார். இருப்பினும் அதற்குள் பந்தை எடுத்த நேபாள் வீரர் திபேந்திரா சிங் மிகவும் சரியாக ஸ்டம்பை பார்த்து அடித்தார்.
அப்போது வெள்ளை கோட்டை நெருங்கிய ரிஸ்வான் தம்முடைய உடலுக்கு மிகவும் நெருக்கமாக பந்து வந்ததை அறிந்து அதிலிருந்து தப்பிப்பதற்காக ஓடியவாக்கிலேயே தம்முடைய உடலையும் பேட்டையும் சற்றே பின்னோக்கி இழுத்தார். ஆனால் தமது உடலில் அடி வாங்கக்கூடாது என்பதில் அவர் அக்கறை காட்டிக் கொண்டிருந்த நேரத்தில் உள்ளே சென்ற பந்து ஸ்டம்பை பதம் பார்த்தது.
— Nihari Korma (@NihariVsKorma) August 30, 2023
அதனால் பந்தை தடுக்கக்கூடாது என்ற நோக்கத்துடன் செயல்பட்ட அவர் பேட்டை தன்னுடைய காலையும் வெள்ளை கோட்டில் தொடுவதற்கு தவறியதால் பரிதாபமாக ரன் அவுட்டாகி சென்றார். இதனால் கோபமடைந்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தன்னுடைய தொப்பியை தூக்கி வீசி அப்போது தந்து அதிருப்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்தினார். இப்படிப்பட்ட நிலையில் தான் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சளர் அஸ்வின் இந்த சம்பவம் குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில் “அந்த நிகழ்வின் போது பில்டர் விந்தை பந்தின் உயரம் ரிஸ்வான் தான் விக்கெட்டில் ஆகாமல் தவிர்ப்பதை கடினமாக்கியது, ஆனால் பொதுவாக விக்கெட்டுகளுக்கு இடையில் ஓடும் போது தனது மைதானத்தை ஆட்டமிழப்பதில் இருந்து தப்பிப்பதற்கு டைவ் செய்யும் நிலையில் அவர் அதை செய்யாமல் இருந்தது அரிய நிகழ்வாகும். அவர் ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை. அதனால் டைவ் செய்யாமல் இருந்திருக்கலாம். சுழலுக்கு எதிராக ஸ்வீப் செய்வதை விரும்பும் அவர் ஹெல்மெட்டும் அணியாமல் விளையாடியது விநோதமாக இருந்தது என்றார் அஸ்வின்.