இந்திய அணி இங்கிலாந்தின் பாஸ்பால் முறையில் விளையாடினால் என்ன நடக்கும்? அஸ்வின் கூறிய அதிர்ச்சி தகவல்.
வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் 2023 தொடரானது தற்போது நடந்து முடிந்திருக்கிறது. இதில் முதல் மற்றும் இரண்டவது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்ற பிறகு இந்த தொடரில் ஆஸ்திரேலியாவே வெற்றி பெரும் என்று நினைத்தார்கள். ஆனால் அதற்கு பிறகு 3 டெஸ்ட் போட்டிகளும் அதிர்ச்சிக்கு பஞ்சம் இல்லை என்று
வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் 2023 தொடரானது தற்போது நடந்து முடிந்திருக்கிறது. இதில் முதல் மற்றும் இரண்டவது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்ற பிறகு இந்த தொடரில் ஆஸ்திரேலியாவே வெற்றி பெரும் என்று நினைத்தார்கள். ஆனால் அதற்கு பிறகு 3 டெஸ்ட் போட்டிகளும் அதிர்ச்சிக்கு பஞ்சம் இல்லை என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து விளையாடும் பாஸ்பால் முறை எடுபட வில்லை என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.
மேலும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்களே இதற்கு பதிலாக நாம் பாரம்பரிய டெஸ்ட் முறையில் விளையாடி இருந்தாலே வெற்றி பெற்றிருக்கலாம் என்று பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இருவரையும் கடுமையாக விமர்சித்தனர். மேலும் ஆஸ்திரேலிய ஊடங்களும் இங்கிலாந்து அணியை விமரிசித்து இருந்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு இது ஒரு தன்மான பிரச்சனையாக மாறியது.
இதனையடுத்து முழு வீச்சில் விளையாடிய இங்கிலாந்து 3 வது மற்றும் 4வது அதிரடியாக விளையாடியது. பின்னர் 5வது போட்டி பல அதிர்ச்சிகளை கொடுத்து இங்கிலாந்து அணியானது வெற்றி பெற்று இந்த தொடரை சமன் செய்து பாஸ்பால் முறையை குறித்து விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்தது இங்கிலாந்து. மேலும் இந்த போட்டியானது இந்த பாஸ்பால் முறையால் மீண்டும் டெஸ்ட் போட்டியானது பலரது கவனத்திற்கு சென்றது. மேலும் இந்த முறையை டீகோட் செய்யவும் பலர் தற்போது முயற்சி செய்து வருகின்ற்றனர்.
இந்த நிலையில் தான் உலகின் நம்பர் 1 டெஸ்ட் பந்துவீச்சாளராக இருக்கும் இந்திய அணியின் அஸ்வின் இந்த பாஸ் பால் முயரை இந்தியா விளையாடினாள் என்ன நடக்கும் என்பது குறித்து சமீபத்தில் அவர் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பேசியுள்ளார்.
அஸ்வின் கூறியது :
டெஸ்ட் கிரிக்கெட்டில் விரைவில் ஒரு மாற்றத்தை சந்திப்போம். அந்த கட்டத்தில் விஷயங்கள் எளிதாக இருக்காது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பிரச்சனைகள் இருக்கும். ஆனால் இந்த கட்டத்தில் இந்தியா பாஸ்பால் முறையில் விளையாடுகிறது என்று வைத்துக்கொள்வோம். ஒரு வீரர் ஹாரி புரூக் போன்று எல்லா பந்துகளையும் அடித்து ஒரு வீரர் அவுட் ஆகி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோற்றோம் என்றால். நாம் என்ன செய்யலாம்?
அந்த முறையை விளையாட வீரர்களை ஆதரிப்போமா? அப்படி நடந்தால் நம்முடைய அணியில் இருந்து 4 வீரர்களை நீக்கி விடுவார்கள். இப்படித்தான் நம்முடைய கலாச்சரம் எப்போதும் இருந்து வருகிறது. இந்த காரணத்தினால் மற்றவர்கள் விளையாடுவதை அப்படியே நகலெடுத்து விளையாட முடியாது. இந்த பாஸ் பால் முறை இங்கிலாந்து அணிக்கு மட்டுமேதான் சரியாக வேலை செய்யும்.
ஏனென்றால் அவர்களது கிரிக்கெட் நிர்வாகம் அந்த முறையில் விளையாட வீரர்களுக்கு முழு ஆதரவளித்து ஊக்கப்படுத்துகிறது. அங்குள்ள தேர்வாளர்களும் வீரர்களுக்கு பாஸ்பால் முறையில் விளையாட அனுமதிக்கிறார்கள். சொல்லப்போனால் இங்கிலாந்து அணியின் ரசிகர்களும் அந்த கிரிக்கெட் முறையை வரவேற்கின்றனர். ஆனால் அப்படியெல்லாம் நம்மால் செய்து விளையாட முடியாது என்றார் ரவிச்சந்திரன் அஸ்வின்.