வீடியோ : இதற்க்காவே தோனிக்கு வாழ்நாள் முழுவதும் அவருக்கு நன்றியுடன் இருப்பேன் – அஷ்வின் உருக்கமான பேச்சு.
இந்திய அணியின் மிகப்பெரிய சுழற்பந்து வீச்சாளர் என்றால் அது ரவிச்சந்திர அஷ்வின் தான். மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் அவர் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார். தற்போது அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது 100வது டெஸ்ட் போட்டியும் அது மட்டுமல்லாமல் 500 டெஸ்ட் விக்கெட்டுக
இந்திய அணியின் மிகப்பெரிய சுழற்பந்து வீச்சாளர் என்றால் அது ரவிச்சந்திர அஷ்வின் தான். மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் அவர் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார். தற்போது அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது 100வது டெஸ்ட் போட்டியும் அது மட்டுமல்லாமல் 500 டெஸ்ட் விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார். அவர் தற்போது 516 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையும் அவர் பெற்று இருந்தார்.
அஷ்வின் ஒருநாள் போட்டிகளில் 156 விக்கெட்டுகளும் T20 போட்டிகளில் 72 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் 90 போட்டிகளில் 97 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார். அவருக்கு ஆரம்ப கால கட்டத்தில் பெரிதும் உதவி முன்னிலைப் படுத்தியது தோனி தான். அவர் முதன் முறையாக சென்னை அணிக்காக தான் ஐபிஎல் போட்டியில் அறிமுகமாகி அதன் பின் இந்திய அணியில் இணைந்து தற்போது கலக்கிக்கொண்டு இருகின்றார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 500 விக்கெட்டை வீழ்த்தியதற்கு மற்றும் 100வது டெஸ்ட் போட்டியில் விளையடியதற்க்காக அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் TNCA தமிழ் நாடு கிரிக்கெட் அசோசியேஷன் அவருக்கு பாராட்டு விழா நடத்தியது. அதில் சென்னை அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் ஸ்ரீகாந்த் அணில் கும்ப்ளே போன்ற பல முக்கிய வீரர்கள் கலந்து கொண்டு அவரை பாராட்டி இருந்தனர்.
இதில் தோனி உடனான உறவு குறித்தும் தோனி தனக்கு அளித்த முக்கியத்துவம் குறித்தும் அவர் சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இது குறித்து அவர் கூறுகையில், 2008ல் நான் அனைத்து ஜாம்பவான்களையும் (சிஎஸ்கே டிரஸ்ஸிங் ரூமில்) மேத்யூ ஹெய்டன் மற்றும் எம்எஸ் தோனியை சந்தித்தேன். நான் (ஐபிஎல்) 2008 வரை அமர்ந்திருந்தேன். அப்போது நான் யாரும் இல்லை, முத்தையா முரளிதரன் இருந்த அணியில் நான் எங்கே விளையாடுவேன். நான் கடமைப்பட்டிருக்கிறேன். தோனி எனக்கு கொடுத்த வாய்ப்புகளுக்காக வாழ்நாள் முழுவதும் அவருக்கு நன்றியுடன் இருப்பேன். அவர்தான் கெய்லுக்கு முதல் ஓவரை என்னை வீச வைத்தார்.
2013 இல் ஒரு தொடரின் போது என்னை அணியிலிருந்து ட்ராப் செய்யும் முடிவில் இருந்தார்கள். தோனிதான் `அவர் கடந்த சீரிஸில் சிறப்பாக ஆடியிருக்கிறார்.’ எனக் கூறி எனக்காக இயன்றளவுக்கு சப்போர்ட் செய்து அணியில் எடுத்தார். இந்த இடம் எனக்கு நிறைய கற்று கொடுத்துள்ளது, நான் தொடர்ந்து இங்கு வர விரும்புகிறேன். மக்கள் ஏன் திரும்பிச் செல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்கிறார்கள். நாளை, நான் உயிருடன் இல்லாமல் இருக்கலாம், ஆனால் என் ஆன்மா இந்த இடத்தைச் சுற்றித் தொங்கும். இதுதான் இந்த இடம். எனக்கு அர்த்தம் எனவும் அஸ்வின்கூறியிருந்தார்.