இந்திய கிரிக்கெட்டில் நடக்கும் அரசியல் காரணமாக கிரிக்கெட் விட்டு விலக நினைத்தேன். என் அப்பா இதை சொல்லி தான் ஆறுதல் படுத்தினார் – அஷ்வின் பேச்சு
இந்திய அணியின் மிகப்பெரிய சுழற்பந்து வீச்சாளர் என்றால் அது ரவிச்சந்திர அஷ்வின் தான். மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் அவர் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார். தற்போது அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது 100வது டெஸ்ட் போட்டியும் அது மட்டுமல்லாமல் 500 டெஸ்ட் விக்கெட்டுக
இந்திய அணியின் மிகப்பெரிய சுழற்பந்து வீச்சாளர் என்றால் அது ரவிச்சந்திர அஷ்வின் தான். மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் அவர் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார். தற்போது அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது 100வது டெஸ்ட் போட்டியும் அது மட்டுமல்லாமல் 500 டெஸ்ட் விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார். அவர் தற்போது 516 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையும் அவர் பெற்று இருந்தார்.
அஷ்வின் ஒருநாள் போட்டிகளில் 156 விக்கெட்டுகளும் T20 போட்டிகளில் 72 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் 90 போட்டிகளில் 97 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார். அவருக்கு ஆரம்ப கால கட்டத்தில் பெரிதும் உதவி முன்னிலைப் படுத்தியது தோனி தான். அவர் முதன் முறையாக சென்னை அணிக்காக தான் ஐபிஎல் போட்டியில் அறிமுகமாகி அதன் பின் இந்திய அணியில் இணைந்து தற்போது கலக்கிக்கொண்டு இருகின்றார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 500 விக்கெட்டை வீழ்த்தியதற்கு மற்றும் 100வது டெஸ்ட் போட்டியில் விளையடியதற்க்காக அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் TNCA தமிழ் நாடு கிரிக்கெட் அசோசியேஷன் அவருக்கு பாராட்டு விழா நடத்தியது. அதில் சென்னை அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் ஸ்ரீகாந்த் அணில் கும்ப்ளே போன்ற பல முக்கிய வீரர்கள் கலந்து கொண்டு அவரை பாராட்டி இருந்தனர்.
அதன் பின் அவருடைய அப்பா உடனான பாசத்தை பற்றியும் கிரிக்கெட்டில் நடந்தது பற்றியும் சில கருத்துக்களை வெளிப்படையாக அவர் தெரிவித்து இருந்தார். நான் கிரிக்கெட்டிலிருந்து விலக முடிவு செய்தேன். நான் என்ன செய்வேன் என்று என்னையே கேட்டுக்கொண்டேன். வாழ்க்கையில் நான் எதைச் செய்தாலும், அந்தத் தொழிலில் என்னால் முடிந்தவரை சிறந்து விளங்க முயற்சிப்பேன். எனக்கு கிரிக்கெட்டில் நடந்த அரசியல் கார்பரேட் தலைய்ர்ர்டுகளால் திரும்பி வந்துவிடலாம் என்று நான் நினைத்துள்ளேன்.
இதை நான் என் அப்பாவிடம் கூறும்போது என் அப்பாவுக்கும் நிறைய சண்டைகள் வரும். என் அப்பா அப்போது நேர்மையாக இருப்பது தான் உனது பிரச்சினை என்று தந்தை திட்டிய போது கண்ணீர் விட்டு அழுததாகவும் அவர் கூறினார்.