இந்த முடிவு ருதுராஜூக்கு அப்போ தெரிஞ்சி கூட இருக்காது… தோனி அவரிடம் இதை தான் சொல்லி இருப்பாரு – அஷ்வின் பேச்சு.
உலக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த IPL 2024 திருவிழா இன்று தொடங்குகிறது. அதில் முதல் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பெங்களூரு அணியை எதிர்த்து சென்னை அணி மோதவுள்ளது. இதில் சென்னை அணியின் ரசிகர்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அதிர்ச்சியான செய்தி என்ன வெ
உலக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த IPL 2024 திருவிழா இன்று தொடங்குகிறது. அதில் முதல் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பெங்களூரு அணியை எதிர்த்து சென்னை அணி மோதவுள்ளது. இதில் சென்னை அணியின் ரசிகர்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அதிர்ச்சியான செய்தி என்ன வென்றால் சென்னை அணியின் கேப்டனாக தோனி தாமாக விலகி ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு அந்த பதவியை அவர் வழங்கி விட்டார்.
ஐபிஎல் பொறுத்தவரை இது நடைபெற்ற சீசன்களில் இரண்டு முறை தவிர்த்து பெரும்பாலான சீசன்களில் சென்னை அணியை பிளே ஆப்பிற்கு கொண்டு சென்றுள்ளார். அதில் ஐந்து முறை கோப்பையையும் 5 முறை இரண்டாவது இடத்தையும் தக்கவைத்து கொண்டுள்ளது. அது மட்டுமல்லாமல் அவர் CLT கோப்பையையையும் இரண்டு முறை பெற்று கேப்டன்சியில் தனது திறமையை நிருப்பித்துள்ளர். அவர் கேப்டன்சியில் எப்போதும் கூலாக இருப்பதால் அனைவரும் அவரை கேப்டன் கூல் என்றும் அழைப்பார்கள்.
இந்த வருடம் ஐபிஎல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தமான செய்தி என்னவென்றால் இது வரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் தோனி ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகிய மூவரில் ஒருவர் ஒரு அணிக்கு கேப்டன்சியில் இருப்பார்கள். ஆனால் இந்த முறை இந்த மூன்று வீரர்களும் இந்த தொடரில் வெறும் வீரர்களாக மட்டுமே விளையாட உள்ளனர். தோனி தனது கேப்டன்சி பதவியை சென்னை அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டை கேப்டன்சியில் அமர்த்தியுள்ளார்.
தோனி கடைசி ஐபிஎல் போட்டியில் கோப்பை வென்று வெற்றி கேப்டனாக தந்து கேப்டன்சி பதவியை துறந்துள்ளார். அவர் கடந்த வருடமே காலில் காயத்துடன் தான் பேட்டிங் செய்து வந்தார். தோனி தற்போது கேப்டன்சியில் இருந்து விலகியது ரசிகர்களுக்கு எமற்றதைய அளித்துள்ளது.இது குறித்து முன்னாள் சென்னை அணியின் வீரரும் தற்போது ராஜஸ்தான் அணியின் வீரர் அஷ்வின் கூறுகையில், இது தவிர்க்க முடியாத முடிவு.
அது ஒரு கட்டத்தில் வர வேண்டியிருந்தது. தோனியை எனக்கு தெரியும். அவர் அணியை முன்னணியில் வைத்திருக்கிறார். அணியின் நலனைப் பற்றி அவர் தொடர்ந்து சிந்திக்கிறார்.அதன் காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன்பு கேப்டன் பதவியை ஜடேஜாவிடம் கொடுத்தார். இப்போது ருதுராஜிடம் கொடுத்துள்ளார். இந்த முடிவு நடக்க வேண்டும். யார், எப்படி என்ற கேள்வியாகவே இருந்தது. நேற்று வரை ருதுராஜ் தனது தனது ரோல் பேட்டிங் மட்டுமே என்று நினைத்திருக்க மாட்டார்.
தோனியை எனக்கு நன்றாகத் தெரியும். அவரது அறையில் அமர்ந்து இளைஞர்களுடன் இரவு உணவை ருதுராஜ் கடந்த ஆண்டு ருதுராஜிடம் சொல்லியிருப்பார், நான் ஆச்சரியப்பட மாட்டேன். அது ருதுராஜுக்கு ஆச்சரியமாக இல்லை என்று நினைக்கிறேன். அண்ணே நீங்கள் பொறுப்பேற்கப் போகிறீர்கள்.இதையெல்லாம் நீங்கள் செய்யலாம். ‘நான் இருப்பேன்,கவலைப்படாதே’ என்று தோனி இரவு ருதுராஜிடம் கூறியிருக்கிறார். முன்கூட்டியே,” அஸ்வின் கூறினார்.