இந்தியாவில் நடைபெறும் ODI உலகக் கோப்பைக்கான போட்டியில் பாக்கிஸ்தான் அணியின் கோரிக்கையை பற்றி பேசிய அஷ்வின்.

WTC இறுதிப் போட்டி முடிவடைந்த நிலையில் வரவிருக்கும் ODI உலகக் கோப்பை 2023 இந்தியாவால் நடத்தப்பட உள்ளது. இப்போட்டிகள் அக்டோபர் 5 மற்றும் நவம்பர் 23 க்கு இடையில் நடைபெற உள்ளது. போட்டியின் அதிகாரப்பூர்வ அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை. உலகக் கோப்பை தொடங்குவதற்கு இன்னும் சில மாதங்

By ·

WTC இறுதிப் போட்டி முடிவடைந்த நிலையில் வரவிருக்கும் ODI உலகக் கோப்பை 2023 இந்தியாவால் நடத்தப்பட உள்ளது. இப்போட்டிகள்  அக்டோபர் 5 மற்றும் நவம்பர் 23 க்கு இடையில் நடைபெற உள்ளது. போட்டியின் அதிகாரப்பூர்வ அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை. உலகக் கோப்பை தொடங்குவதற்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில்,

ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) பாகிஸ்தானின் போட்டியில் பங்கேற்பதற்கான பிசிபி (பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்) உறுதிப்படுத்தலுக்காக இன்னும் காத்திருக்கிறது. இந்நிலையில் பிசிபி சமீபத்தில் ஐசிசியிடம் ஒரு வினோதமான கோரிக்கையை வைத்தது, அதில் அவர்கள் உலகக் கோப்பையில் நடைபெறும் இரண்டு போட்டிகளுக்கான இடத்தை மாற்ற வேண்டும் என்று கோரினர். சில நாட்களுக்கு முன்னர் வெளிச்சத்திற்கு வந்த அட்டவணையின் ஒரு பகுதியாக, பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியாவை பாகிஸ்தான் எதிர்கொள்கிறது,

அதன்பிறகு சில நாட்களுக்குப் பிறகு சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. இருப்பினும், காரணத்தை வழங்காமல், இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் இடத்தை மாற்றுமாறு கோரியுள்ளது. இதே கோரிக்கையை இந்திய மூத்த ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின் இந்த கோரிக்கையை வினோதமானதாகக் கருதினார், அவர் முன் வந்து, இடம் மாற்றத்திற்கான காரணம் என பிசிபி பாதுகாப்பு காரணங்களைக் குறிப்பிட்டிருந்தால், ஐசிசி கோரிக்கையை பார்க்கலாம் என்று கருத்து தெரிவித்தார்.

“சென்னையில் ஆப்கானிஸ்தானுக்கு சூழ்நிலைகள் சாதகமாக அமையும் என்று பாகிஸ்தான் தங்களது கோரிக்கை கடிதத்திலேயே குறிப்பிட்டுள்ளது. அதனால், மைதானங்களை மாற்றுவது பாகிஸ்தானுக்கு சாதகமாக அமையும். எனவே, ஐசிசி இந்த கோரிக்கைக்கு செவிசாய்க்கும் என்று நான் மிகவும் சந்தேக படுகிறேன் . சில சரியான பாதுகாப்பு காரணங்களை கொடுத்துள்ளனர், பின்னர் அது மாற்றப்படலாம். “இன்னொரு முக்கியமான விஷயம்.

பாகிஸ்தானின் சுவாரசியமான வேண்டுகோள், மைதானங்களை மாற்றுவது இப்போது, ​​பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவை பெங்களூரிலும், ஆப்கானிஸ்தானுடன் சென்னையில் விளையாடுகிறது. அவர்கள் மைதானங்களை மாற்றிக் கொள்ள விரும்புகிறார்கள்” என்று அஸ்வின் தனது யூடியூப் சேனலில் தெரிவித்தார். “பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டுமே, ஐசிசி இந்த கோரிக்கைகளை பரிசீலிக்கும். 2016 T20 WC இல், இந்தியா vs பாகிஸ்தான் தர்மசாலாவில் நடக்க இருந்தது, ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அது கொல்கத்தாவிற்கு மாற்றப்பட்டது,” என்று அவர் மேலும் கூறினார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை