ரொம்ப பெருமையா இருக்கு… ஆசிய கோப்பை 2023 வெற்றிக்கு பிறகு ரோஹித் சர்மா மகிழ்ச்சி பேட்டி
அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக தற்போது ஆசிய கோப்பை போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூலம் உலக கோப்பை போட்டியில் விளையாடும் ஆசிய அணிக்கு நல்ல ஒரு பயிற்ச்சியாக இருக்கும்
அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக தற்போது ஆசிய கோப்பை போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூலம் உலக கோப்பை போட்டியில் விளையாடும் ஆசிய அணிக்கு நல்ல ஒரு பயிற்ச்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த தொடரில் முதலில் இதே ஆதிக்கம் செழித்தி வந்தது இந்திய அணி.
அதன் காரணமாக இந்தியா முதல் ஆளாக ஆசிய கோப்பை 2023 தொடரின் இறுதி போட்டிக்கு சென்றது. இதனையடுத்து பாகிஸ்தான் அணியை வீழ்த்திய இலங்கை அணி இன்று செப்டம்பர் 17ஆம் தேதி மாபெரும் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர். இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணியானது பந்தவீசுவதாக அறிவித்தது. ஆனால் அது மிகப்பெரிய ஒரு தவறான விஷயம் என்று பின்னர் தான் அவர்களுக்கு தெரியவந்தது.
ஏனென்றால் இந்திய அணியானது 50 ரன்கள் மட்டுமே கொடுத்து இலங்கை அணியை சுலபமாக வீழ்த்தியது. இது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் இலங்கை அணியை அவர்களது நாட்டில் வீழ்த்தியது இந்தியா. இந்நிலையில் இந்த போட்டிக்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் “இன்று இந்திய அணி மிகச் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
ஆசிய கோப்பை 2023 தொடரின் இறுதி போட்டியில் இப்படி வந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது நமது அணியின் வீரர்களின் நல்ல மனநிலையை வெளிக்காட்டுகிறது. நாம் பந்துவீச்சில் சிறப்பாக துவங்கி பேட்டிங்கில் சிறப்பாக முடித்திருக்கிறோம். நான் ஸ்லிப் பகுதியில் பீல்டிங் செய்து கொண்டிருக்கையில் நமது பந்துவீச்சாளர்கள் பந்து வீசுவதை பார்க்கவே பெருமையாக இருக்கிறது.
நமது அணியின் வேகப்பந்து வீச்சாளர்களின் திட்டம் மிகவும் தெளிவாக இருப்பதனாலே சிறப்பாக பந்து வீச முடிகிறது. இந்த போட்டி இவ்வளவு சீக்கிரம் முடியும் என்று எதிர்பார்க்கவில்லை. சிராஜிக்கு அதிக பாராட்டுகளை கொடுத்தே ஆக வேண்டும். ஏனெனில் அவரது பந்துவீச்சில் பால் காற்றில் வரும் போதும் சரி, பிட்ச்சாகும் போதும் சரி ஸ்விங் ஆகிறது. இந்த தொடரில் அனைத்து துறைகளிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வந்த்துள்ளோம்.
இந்த வெற்றியை அப்படியே உலகக்கோப்பை தொடரிலும் தொடர விரும்புகிறோம். இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஹார்திக் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருந்தனர். அதேபோன்று கே.எல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் சதமும் அடித்து இருந்தனர். கில்லும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இப்படி பல்வேறு வீரர்களும் வெவ்வேறு சூழ்நிலைகளில் இந்திய அணியின் வெற்றிக்கு உதவியுள்ளனர் என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.