“தனி ஆளாக போராடிய பென் ஸ்டோக்ஸ்” பேட்ங்கில் சொதப்பிய இங்கிலாந்து – ஆஸ்திரலியா மீண்டும் முன்னிலை.
கிரிக்கெட் வரலாற்றில் சிறப்புமிக்க தொடர்களில் ஒன்றான ஆஷஸ் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 2 டெஸ்ட் போட்டிகள் முடிந்த நிலையில் முதல் இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 0- 2 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. இது இங்கிலாந்திற்கு மிகப்
கிரிக்கெட் வரலாற்றில் சிறப்புமிக்க தொடர்களில் ஒன்றான ஆஷஸ் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 2 டெஸ்ட் போட்டிகள் முடிந்த நிலையில் முதல் இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 0- 2 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. இது இங்கிலாந்திற்கு மிகப்பெரிய பின்னடைவு ஏனென்றால் வரலாற்று ஒரே ஒரு முறை மட்டுமே 0 – 2 என்ற போது ஆஷஸ் தொடரை வென்றிருக்கிறது.
கடந்த 37/38 ஆஷஸ் தொடரில் மட்டுமே டான் பிரெட்மான் மற்றும் அவரது தலைமையினால் ஆஸ்திரலிய அணி அடுத்த மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. அப்படிப்பட்ட நிலமை தான் தற்போது இங்கிலாந்து அணிக்கு வந்துள்ளது. ஏனெனவே தொடர்ந்து வரும் போட்டிகளில் இங்கிலாந்து வெற்றியடைய வேண்டும்.
இந்நிலையில் தற்போது 3வது போட்டியானது ஹெடிங்கிலே மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்கில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச முடிவு செய்தது. இதனையடுத்து சிறப்பாக விளையாடிய ஆஸ்திரலேய அணியின் மிச்சல் மார்ஸ் அதிரடியாக ஆடி 17 போர்ஸ் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 118 பந்துகளில் 118 ரன்களை விளாசினார். இந்த இன்னிங் இங்கிலாந்து அணிக்கு மிகவும் தேவையான ஒன்றாக இருந்தது.
ஏனென்றால் மற்ற பேர்ஸ்மென்கள் 50 ரன்களை கூட தாண்டாமல் ஆட்டமிழந்தார்கள். இருதியில் ஆஸ்திரேலிய அணி அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 263 ரன்கள் மட்டுமே விளாசியது. இந்நிலையில் அடுத்ததாக களமிறங்கிய இங்கிலாந்து அணி இந்த ரன்களை விரைவாக கடக்கும் என்றிருந்த நிலையில் ஆரம்பவே அதிர்ச்சி கொடுக்கும் மளமளவென விக்கெட்டுகளை வீழ்த்தியது. இதனால் முதல் நாளின் முடிவில் ஜாக் கிராலி மட்டுமே அதிகபட்சமாக 33 ரன்களை மட்டுமே அடித்தார். பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பென் டக்கட் மற்றும் ஹாரி புரூக் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள்.
இதனையடுத்து இரண்டாவது நாளை தொடங்கிய இங்கிலாந்து அணி 68 ரங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்த நிலையில் ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுக மறுபக்கம் அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 108 பந்துகளில் 80 ரன்களை விளாசினார். இதற்க்கு முன்னர் 2வது டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் 150 ரன்களுக்கு மேலே தனி ஆளாக போராடிய அடித்தது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் வீரர்கள் பெரிதா ரன்கள் எதையும் அடிக்க வில்லை. மெயின் அலி 21 ரன்களை மட்டுமே அடிக்க மார்க் வுட் 24 ரன்களும், வோக்ஸ் 10 ரன்கள் மட்டுமே அடித்தார்கள். இதனால் இங்கிலாந்து அணி அணைத்து விக்கெட்டுகளையும் முதல் நாளில் இழந்த நிலையில் 237 ரன்கள் மட்டுமே அடித்து. இதனையடுத்து ஆஸ்திரேலியா விளையாடிவரும் நிலையில் 2வது நாளின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது.