திரும்பி வந்த டேவிட் வார்னர்.. மாஸ் காட்டிய மிச்செல் மார்ஷ் – பாகிஸ்தானுக்கு 368 ரன்கள் இலக்கு.

உலக கோப்பை 2023 தொடரானது தற்போது சுவாரசியமான கட்டத்தை எட்டிய நிலையில் அணிகள் பலவும் ஏற்கனவே 3 போட்டிகளை விளையாடிய நிலையில் அவர்களின் பலம் எனது பலவீனம் எனது என்பது குறித்து நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றனர். இந்நிலையில் இன்று ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியா

By ·

உலக கோப்பை 2023 தொடரானது தற்போது சுவாரசியமான கட்டத்தை எட்டிய நிலையில் அணிகள் பலவும் ஏற்கனவே 3 போட்டிகளை விளையாடிய நிலையில் அவர்களின் பலம் எனது பலவீனம் எனது என்பது குறித்து நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றனர். இந்நிலையில் இன்று ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியானது சின்னசாமி மைத்தனத்தில் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே இந்திய அணியிடம் தோற்ற பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலிய அணியிடம் வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் களமிறங்கியது. இருந்த போதிலும் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு கொஞ்சம் கேள்விக்குறியாக நிலையில் தான் இருக்கிறது. ஏனென்றால் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் அதிகமாக திணறினார்கள். இதனால் அதனையும் சரி செய்ய வேண்டிய நிலையில் பாகிஸ்தான் இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியானது பந்துவீச முடிவு செய்தது. ஆனால் அவர்களின் முடிவு சரிதானா என்ற கேள்வியும் எழுந்தது. ஏனென்றால் சின்னசாமி மைதானம் அளவில் சிறியது. இதனால் பெரிய ஸ்கோர் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் முதல் பேட்டிங் செய்ய வந்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் மிச்செல் மார்ஷ் களமிறங்க முதல் பந்தே ரீவிவ் கேட்டனர் பாகிஸ்தான்.

ஆனால் அந்த ரீவிவ் தோல்வியில் முடியவே அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட ஆஸ்திரேலியா தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடியது. டேவிட் வார்னர் மற்றும் மிச்செல் மார்ஷ் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் பந்துகளை நாலாபுறமும் சிதறடிக்க இவர்களின் பாட்னர்ஷிப் 30வது ஓவரில் 200 ரன்களை கடந்தது. மேலும் சிறப்பாக விளையாடிய வார்னர் 85 பந்துகளில் சதம் அடிக்க மார்ஸ் 100 பந்துகளில் சதம் அடித்தார்.

மேலும் சதம் அடித்த கையேடு இருக்காமல் தொடர்ந்து அதிரடியாக விளையாட ஒரே ஓவரில் மிச்செல் மார்ஸ் மற்றும் மேக்ஸ் வெல் விக்கெட்டை கைப்பற்றினர் ஷஹீன் அப்ரிடி. இருந்த போதிலும் டேவிட் வார்னர் நிலையாக நின்று விளையாட ஆஸ்திரேலிய அணியானது 300 ரன்களை கடந்தது. இறுதியில் டேவிட் வார்னர் 124 பந்துகளுக்கு 163 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார் பின்னர் வந்த ஸ்மித் 7 ரன்களிலும் ஜோஸ் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் 24 பந்துகளில் 21 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, மிச்செல் ஸ்டாருக்கும் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ரன்கள் என்பது பெரிதாக கிடைக்கவில்லை. மேலும் அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 367 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக பாகிஸ்தான் அணியின் ஷஹீன் அப்ரிடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை