WTC ஃபைனலில் ஆஸ்திரேலியா நம்மை எல்லா துறைகளிலும் வீழ்த்தி விட்டது – கீர்த்தி ஆசாத்

சமீபத்தில் லண்டனில் உள்ள ஓவலில் நடந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி இந்தியாவை வீழ்த்திய நிலையில் அந்த போட்டியில் ஆஸ்த்திரலியா இந்தியாவை அனைத்து துறைகளிலும் தோற்கடித்ததாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத்

By ·

சமீபத்தில் லண்டனில் உள்ள ஓவலில் நடந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி இந்தியாவை வீழ்த்திய நிலையில் அந்த போட்டியில் ஆஸ்த்திரலியா இந்தியாவை அனைத்து துறைகளிலும் தோற்கடித்ததாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத் கூறியுள்ளார். கடந்த ஜூன் 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரே டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில் ரோஹித் ஷர்மா தலைமையிலான 209 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தனர்.

WTC இறுதிப் போட்டியில் இந்தியாவின் இரண்டாவது தொடர்ச்சியான தோல்வி இதுவாகும். இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு செய்த்து. இருப்பினும் டிராவிஸ் ஹெட் 174 பந்தில் 163 ரங்களும் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் 268 பந்தில் 121 ரன்களையும் விளாசி சதம் அடித்தனர், இதனால் ஆஸ்திரேலியா தொடக்க இன்னிங்ஸில் 469 ரன்கள் எடுத்ததால் இயந்தியாவிற்கு முதல் இன்னிங்கே பின்னடைவாக அமைந்தது.

அப்படிப்பட்ட நிலையில் தான் இந்தியாவின் முன்னாள் வீரரான ஆசாத் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் குறித்து பேசியுள்ளார் அவர் கூறுகையில் “இந்த wtc போட்டியில் ஒவ்வொரு துறையிலும் ஆஸ்திரேலியா நம்மை தோற்கடித்து விட்டது . அவர்களின் பந்துவீச்சும் பேட்டிங்கும் சிறப்பாக இருந்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சாளர்கள் பார்த்தால் அவர்கள் முற்றிலும் துல்லியமாக இருந்தனர், அவர்கள் விக்கெட்டுகளைப் பெறாவிட்டாலும் சரியான வரிசையில் பந்துவீசினார்கள்.

ஆனால் நம்முடைய பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுத்தால் அதிக உற்சாகமடைந்து, தங்கள் லைன் மற்றும் லென்த்களை சரியாக போடா தவறி விட்டனர். இதனால் தான் தொடக்க இன்னிங்ஸிலேயே இந்தியா போட்டியை இழந்ததாக காரணமாக இருந்தது என்றார். மேலும் ஆஸ்திரேலியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா ஓரளவு சிறப்பாக பந்துவீசியது, ஆனால் முதல் ஆட்டத்தில் அவ்வாறு செய்திருந்தால் கண்டிப்பாக கோப்பையை வென்றிருக்கலாம்.

மேலும் அதிக ரன்களை முதல் இன்னிங்கில் விட்டபிறகு இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா சிறப்பாக பந்துவீசியபோது, ​​ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் எடுத்த ரன்கள் இந்தியாவின் பந்துவீச்சாளர்களுக்கு சவாலானதாக இருந்தது. அஜிங்க்யா ரஹானே மற்றும் விராட் கோலி ஆகியோர் கிரீஸில் இருந்தபோது இந்தியா கண்டிப்பாக வென்றிபெறும் என்று தோன்றியது, ஆனால் அவர்கள் விக்கெட்டுகளை இழந்தனர் என்றார் கீர்த்தி ஆசாத்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை