உங்களுக்கு நான் சொல்வது ஓன்று தான் – அர்ஜுன் டெண்டுல்கருக்கு ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் பிரெட் லீ அறிவுரை.

கிரிக்கெட் உலகில் கடவுள் என்றழைக்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கருக்கு. இவர் இந்திய அணிக்காக பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். அதில் பல சாதனைகள் இன்று வரை முறியடிக்கப்படாமல் இருக்கிறது. இதனால் சச்சின் டெண்டுல்கரின் புகழ் கிரிக்கெட்டில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் பரவி உள்ளது.அப்ப

By ·

கிரிக்கெட் உலகில் கடவுள் என்றழைக்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கருக்கு. இவர் இந்திய அணிக்காக பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். அதில் பல சாதனைகள் இன்று வரை முறியடிக்கப்படாமல் இருக்கிறது. இதனால் சச்சின் டெண்டுல்கரின் புகழ் கிரிக்கெட்டில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் பரவி உள்ளது.அப்படிப்பட்ட ஒரு கிரிக்கெட் ஜாம்பவானுக்கு பிறந்தவர் தான் அர்ஜுன் டெண்டுல்கர்.

23 வயதாகும் அர்ஜுன் டெண்டுலர் பற்றி சொல்லவேண்டும் என்றால் கடந்த மூன்று ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் தன்னுடைய அப்பா இருந்த மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வருகிறார். ஆனால் கந்த SRH vs MI போட்டியில் தான் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட அர்ஜுன் டெண்டுல்கர் 18 ரன்கள் மட்டுமே கொடுத்த 1 விக்கெட்டையும் வீழ்த்தினார். அது அவரின் முதல் போட்டி என்பதினால் மிகவும் உர்ச்சகமாக இருந்தார்.

ஆனால் அதற்கு பிறகு பஞ்சாப் அணியை எதிர்கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணியயின் 16 வது ஓவரை அர்ஜுன் டெண்டுலகர் வீச வந்தார் அப்போது ஒரே ஓவரில் 31 ரன்கள் கொடுத்தார். அது மும்பை ரசிகர்களை அதிர்ச்சியாக இருந்தது. மேலும் சோசியல் மீடியாவில் கடுமையாக இவரை விமர்சித்தனர். இருந்த போதிலும் நேற்று நடந்த GT vs MI போட்டியில் அர்ஜுன் டெண்டுல்கர் சிறப்பாக விளையாடி 2 ஓவர்களில் 9 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டையும் வீழ்த்தினார். அப்படியொரு நிலையில் தான் அர்ஜுன் டெண்டுல்கருக்கு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ அறிவுரை கூறியுள்ளார்.

பிரெட் லீ கூறியது :

அவர் கூறியதாவது “எல்லாவற்றையும் மக்கள் விமர்சிக்கிறார்கள். சந்தீப் ஷர்மாவைப் பாருங்கள் அவர் மணிக்கு 120 கிமீ வேகத்தில் பந்துவீசுகிறார். அர்ஜுன் அதைவிட வேகமாக பந்துவீசுகிறார். ஆனாலும் அவருக்கு வயது 23தான் அவருடைய வழக்கை இனிமேல் தான் இருகிறது. என்னுடைய அறிவுரை என்னவென்றால் உங்களுடைய தந்தையை போல யார் விமர்சிப்பதையும் ஆத்துக்கொடுத்து கேட்காதீர்கள். அர்ஜுனுக்கு அற்புதமான திறமைகள் இருக்கிறது. அவரால் சுலபமாக 140 கிமீ வேகத்தில் பந்து வீச முடியும்.

அவரது திறமையா இன்னும் போக போக அதிகரிக்கத்தான் செய்யும். என்னை பொறுத்தவரையில் அவருடைய வேகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர் எவ்வளவு வேகமாக பந்து வீசுவார் என்பது எனக்குத் தெரியும். அவருக்கு எல்லா திறமைகளும் இருக்கிறது. எனவே எனது அறிவுரை என்னவென்றால் நீங்கள் தொடர்ந்து முயற்சித்து கொண்டே இருக்க வேண்டும். விமர்சிப்பவர்கள் விமர்சித்து கொண்டே தான் இருப்பார்கள்.

ஏனென்றால் சமூக ஊடகங்களில் விமர்சிக்கும் பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு பந்து கூட வீசியிருக்க மாட்டார்கள், அவ்ர்கள் வெறும் கீபோர்டு வீரர்கள் தான் என்று தெரிவித்துள்ளார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை