ஆஸ்திரேலியா அணியின் வீரர்கள் இப்படி பட்டவர்கள் தான். இந்திய அணிக்கு ஆலோசனை வழங்கிய சுனில் கவாஸ்கர்.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவில் நடைபெற்று முடிவடையும் தருவாயில் இருக்கின்றது. இதில் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் இந்திய அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பலப்பரிட்சை செய்ய உள்ளது

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவில் நடைபெற்று முடிவடையும் தருவாயில் இருக்கின்றது. இதில் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் இந்திய அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பலப்பரிட்சை செய்ய உள்ளது. இந்த போட்டியானது வரும் நவம்பர் 9 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது.

இந்திய அணி இந்த உலக கோப்பையில் இதுவரை ஒரு தோல்வியை கூட கண்டிராமல் பலம் வாய்ந்த அணியாகவும் மற்றொன்று பக்கம் ஆஸ்திரேலியா அணியும் இரு தோல்விகளை தழுவி இருந்தாலும் அதன் பின் வந்து அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று ஞாயிறு அன்று இந்தியாவை இறுதிப் போட்டியில் மோத உள்ளது. இந்திய அணி அரை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி எளிதாக 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நேற்று நடந்த தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியா போட்டியில் ஆஸ்திரேலியா அணி தனது சிறப்பான பேட்டிங் மற்றும் பௌலிங் மூலம் தென் ஆப்பிரிக்கா அணியை மூன்று விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.

தென் ஆப்பிரிக்கா அணி மீண்டும் ஒருமுறை அரை இறுதி சுற்றில் வந்து தோல்வியை தழுவி வெளியேறி உள்ளது. 31 வருடங்களாக தென்னாப்பிரிக்கா அணி இறுதிப் போட்டிக்கு செல்லவில்லை என்பதும் குறிப்பிடதக்கது. இந்திய அணியைப் பொறுத்த வரைக்கும் மூன்று துறைகளிலும் இந்திய அணி சிறப்பாகவே செயல்படுகிறது. அதாவது பவுலிங் பேட்டிங் மற்றும் பில்டிங் என மூன்று துறையில் சிறப்பாக செயல்படுகிறது. இந்திய அணிக்கு அதிக அளவில் ரன்கள் குவித்த பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் 700 ரன்களை கடந்து விட்டார் ரோகித் சர்மா மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் 500 ரன்கள் அடித்திருக்கின்றார்கள்.

இந்திய அணியின் மிடில் ஆர்டர் குறித்து எப்போதும் ஒரு விமர்சனம் இருந்து கொண்டே தான் இருக்கின்றது ஆனால் அதனை இந்திய அணி இந்த உலக கோப்பை போட்டியில் நிறைவு செய்து உள்ளது. கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் மிடில் ஆர்டரில் இருவரும் இணைந்து அணிக்கு அற்புதமாக விளையாடி ரன்களை குவித்து இந்திய அணி வெற்றிக்கு ஒரு தூணாக இருக்கின்றார்கள். இந்த உலகக்கோப்பை தொடரிலும் ஒரு மிடில் ஆர்டரில் 500 ரன்கள் அடித்த வீரரும் ஷ்ரேயஸ் ஐயர் தான்.

இந்த இறுதிப்போட்டி குறித்து முன்னாள் இந்திய அணியின் வீரர் சுனில் கவாஸ்கர் கூறுகையில் இந்த இரண்டு அணிகளும் பலமான அணிகளாக தான் இருகின்றார்கள். இந்தியா அணி லீக் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் ஆஸ்திரேலியா அணி இரண்டு போட்டிகளில் மட்டும் தோல்வியை தழுவிய நிலையில் அதன் பின் வந்த அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மேக்ஸ்வெல் ஆட்டத்தை யாராலும் மறக்க முடியாது. ஆனாலும் இந்த உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி தான் பேவரைட் அணியாக இருகின்றது. அவர்கள் இது போன்ற பெரிய போட்டிகளை விட்டு தர மாட்டார்கள் நாட்டிற்கு பெருமை சேர்பதற்காக கடுமையாக அவர்கள் போராட கூடிய குணம் பெற்றவர்கள். ஆஸ்திரேலியா பொறுத்தவரை போட்டியில் இருந்து நம்மால் விலகி கொள்ள முடியாது என்றும் அவர் கூறியிருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை