போன முறை தான் ரிஷப் பண்ட்டை இழந்துட்டோம். இந்த முறை ரொம்ப Fun Ah இருக்கும் – அக்சர் படேல் பேச்சு.

உலக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த IPL 2024 திருவிழா நாளை தொடங்குகிறது. அதில் முதல் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பெங்களூரு அணியை எதிர்த்து சென்னை அணி மோதவுள்ளது. இதில் டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் மீண்டும் வந்துள்ளார். அவருக்கு இரண்டு வர

By ·

உலக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த IPL 2024 திருவிழா நாளை தொடங்குகிறது. அதில் முதல் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பெங்களூரு அணியை எதிர்த்து சென்னை அணி மோதவுள்ளது. இதில் டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் மீண்டும் வந்துள்ளார். அவருக்கு இரண்டு வருடங்களுக்கு முன் அதாவது 30 டிசம்பர் 2022 ஆம் ஆண்டு மிகப்பெரிய கார் விபத்து அவருக்கு நடைபெற்றது. அதில் இருந்து அவர் உயிர் பிழைத்ததே அதிசயம் என்றும் சொல்லலாம்.

அதன் பின் அவர் எந்த ஒரு சர்வதேச மற்றும் ஐபிஎல் போன்ற தொடரிலும் அவர் விளையாட வில்லை. அவர் விளையாடாத 2023ஆம் ஆண்டு டேவிட் வார்னர் அணியின் கேப்டனாக செயல்பட்டு இருந்தார். தற்போது அவர் இந்திய அணியின் வருடந்திர ஒப்பந்தத்திலும் பி கிரேடில் இருந்து வருகிறார். ஐபிஎல் க்கு முன்னதாக நடைபெற்ற NCA டெஸ்ட்டில் அவர் தேர்ச்சி பெற்று ஐபிலில் களமிறங்க வுள்ளார். அது அவரது அணிக்கு பெரும் பலத்தை சேர்க்கும். ஆனால் அவரால் தொடர்ந்து விக்கெட் கீப்பிங் செய்ய முடியமா என்பது கேள்வி குறி தான்.

அவர் மீண்டும் அணியில் இணைந்தது குறித்து டெல்லி அணியின் வீரர் அக்சர் பட்டேல் சிலவற்றை கூறியுள்ளார். ரிஷப் பண்ட் குறித்து அவர் கூறுகையில், அவரை மீண்டும் அணியில் சேர்ப்பது மிகவும் நல்லது என்று அனைவரும் கூறியிருப்பார்கள் என்று நான் நம்புகிறேன், ஆனால் தனிப்பட்ட முறையில், நான் அவரை மிகவும் தவறவிட்டேன், கடந்த ஆண்டு களத்திலும் வெளியேயும் அவர் செய்யும் கேலிக்கூத்துகளை தவறவிட்டேன், ஆனால், இப்போது அவர் திரும்பி வந்துவிட்டதால், விளையாட்டைச் சுற்றியுள்ள தீவிரமான உரையாடல்களுடன் அனைத்து கேலிகளும் கேளிக்கைகளும் தொடங்கியுள்ளன.

இந்த சீசனில் அவருடன் மேலும் வேடிக்கையாக இருக்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். மற்றும் சர்வதேச சுற்றுப்பயணங்கள். அது அணியில் ஒரு சிறந்த சூழல். எங்கள் தொடக்க ஆட்டத்திற்கு முன்பு விசாகப்பட்டினத்தில் நாங்கள் நல்ல தீவிர பயிற்சிகளை மேற்கொண்டோம். இது ஒரு புதிய சீசன், நாங்கள் புதிதாக தொடங்குகிறோம்… முக்கியமாக பயிற்சியாளர்களுடனான உரையாடல்கள் சிறப்பாக இருக்கும். அணியின் திட்டங்கள் மற்றும் மிக முக்கியமாக போட்டியில் விஷயங்களை எளிமையாக வைத்திருப்பது எப்படி நாங்கள் சிந்தித்து கொண்டு உள்ளோம் என்றும் அவர் கூறினார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை