பாபர் அசாமினால் விராட் கோலியை மிஞ்ச முடியும் – முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இம்ரான் கான் அதிரடி.
நவீன கால கிரிக்கெட்டில் யார் சிறந்த வீரர் என்ற விவாதம் ரசிகர்களிடையே விவாதங்கள் பல காலமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக சிறந்த பேட்டரை தேர்ந்தெடுப்பதில் விராட் கோலி மற்றும் பாபர் ஆசாம் இடையே யார் சிறந்த வீரர் என்ற போட்டியானது ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டு
நவீன கால கிரிக்கெட்டில் யார் சிறந்த வீரர் என்ற விவாதம் ரசிகர்களிடையே விவாதங்கள் பல காலமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக சிறந்த பேட்டரை தேர்ந்தெடுப்பதில் விராட் கோலி மற்றும் பாபர் ஆசாம் இடையே யார் சிறந்த வீரர் என்ற போட்டியானது ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பாபரின் தொடர்ச்சியான எழுச்சி, ஒரு கேப்டனாகவும் மேலும் மற்ற வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் ஒரு வீரராகவும் உலக கிரிக்கெட்டிற்கு நிரூபித்து வருகிறார்.
அதே சமயம் இந்தியாவின் முன்னாள் கேப்டன் கோலி தனது நிலைத்தன்மை மற்றும் சாதனைகளை முறியடித்து, சாதனைகளை மீண்டும் எழுதும் படியான வீரராக இருந்து வருகிறார். இப்படி இரண்டு பேருமே சிறந்த திறமை வாய்ந்த வீரர்கள் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. அப்படிப்பட்ட நிலையில் தான் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்னதாக பாபர் மீது துணிச்சலான கருத்தை தெரிவித்துளளார்.
சமீபத்தில் பத்திரிக்கை ஒன்றிக்கு பேட்டி கொடுத்த இம்ரான் கான் கூறுகையில் ” நான் சமீபத்தில் கிரிக்கெட் பார்க்கவில்லை, ஆனால் விராட் கோலியும் பாபர் ஆசாமும் ஒரே வகையான திறமை சாலிகள் என்று தான் நான் நினைக்கிறன். சிறப்பாக விளையாடினாள் பாபர் அசாம் கண்டிப்பாக விராட் கோலியை மிஞ்ச என்று நினைக்கிறன். நான் பார்த்ததிலிருந்து பாபர் அசாம் சிறந்த வீரர் என்று கூறினார் இம்ரான் கான்.
இந்நிலையில் உலக கிரிக்கெட்டால் பிரிக்கப்பட்ட போதிலும் கடந்த ஆண்டு கோலியின் பேட்டிங் பற்றி பாராட்டி பாபர் அசாம் சோசியல் மீடியாவில் கருத்து தெரிவித்தார். மேலும் விராட் கோலியும் கூட கடந்த ஆண்டு ஆசிய கோப்பையின் போது ஒரு நேர்காணலில் பாபர் அசாமை பாராட்டி பேசினார். அவர் கூறுகையில் “பாபர் மிகவும் நல்ல பையன். நான் அவருடன் எப்போதும் நல்ல உரையாடல்களை நடத்தி வருகிறேன். அவர் என்னை விட மிகவும் இளையவர் என்பதால் உறவைப் பற்றி எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவரிடம் மரியாதை இருக்கிறது என்றார் கோலி.
மேலும் 2019 உலகக் கோப்பையில் இங்கிலாந்தில் நடந்த பாபருடனான தனது முதல் சந்திப்பையும் அவர் நினைவு கூர்ந்த கோலி கூறுகையில் “அசாம் எப்போதும் கற்றுக் கொள்வதில் ஆர்வமாக இருக்கிறார். 2019 உலகக் கோப்பையில் எங்கள் ஆட்டத்திற்குப் பிறகு அவர் என்னிடம் பேசினார். அவர் கற்றுக்கொளவதற்கு ஆர்வமாக இருப்பதினால் விளையாட்டின் அனைத்து வடிவங்களிலும் அவர் இப்படி விளையாடுவதில் ஆச்சரியமில்லை. அவர் இயற்கையகவே மிகவும் திறமை வாய்ந்தவர் என்று கூறினார் கோலி.