கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதில் கவலை இல்லை.. இந்த முறை வெல்வோம் – பாக் ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்த பாபர்.
உலக கோப்பை தொடரானது சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த போட்டியில் இந்திய அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து நேற்று நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா மிகவும் சுலபமாகவே வெற்றி பெற்றது. மேலும் அனைத
உலக கோப்பை தொடரானது சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த போட்டியில் இந்திய அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து நேற்று நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா மிகவும் சுலபமாகவே வெற்றி பெற்றது. மேலும் அனைத்து போட்டிகளும் இந்தியாவில் நடைபெறுவதினால் இந்திய அணிக்கு சாதகமான ஒரு சூழ்நிலை தற்போது நிலவுகிறது.
இந்நிலையில் நாளை அகமதாபாத்தில் மைதானத்தில் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் அற்புதமான போட்டியாக இந்தியா vs பாகிஸ்தான் போட்டியானது நடக்க இருக்கிறது. இந்த போட்டியிலும் இந்திய அணியானது வென்று கடந்த 1992ஆம் ஆண்டில் இருந்து ஒருநாள் உலக கோப்பையில் தோற்காமல் இருந்து வரும் பாரம்பரியத்தை இந்த போட்டியிலும் கட்டி காக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படிப்பட்ட நிலையில் இந்தியா மற்றும் பாஸ்கிதான் அணியானது உலக கோப்பையில் 7 முறை மோதியிருக்கிறது இதில் 7 முறையுமே இந்தியா வென்றியை பதிவு செய்திருக்கிறது. ஆனால் கடந்த டி20 உலக கோப்பையில் பாபர் அசாம் தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது போல இப்போதும் நடக்குமா என்பது போட்டியின் போதுதான் தெரியும், இப்பிடிப்பட்ட நிலையில் தான் சமீபத்தில் பாபர் அசாம் கொடுத்த பேட்டியில் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளார்.
பாபர் அசாம் கூறியது :
அவர் கூறுகையில் “கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதில் நான் கவனம் செலுத்த விரும்பவில்லை. வரவிருப்பதில் கவனம் செலுத்த விரும்புகிறேன். சாதனைகள் முறியடிக்கப்படுகின்றன. இதையும் முறியடிக்க முயற்சிப்போம். நாளை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என நம்புகிறோம். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பெரிய நாளில் யார் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பதைப் பொறுத்தது. என்னுடைய அணியினர் அன்றைய தினத்தில் முன்னேறுவார்கள் என்று நான் நம்புகிறேன்.
இந்தியா vs பாகிஸ்தான் ஒரு பெரிய ஆட்டம், இது அதிக தீவிரம் கொண்ட விளையாட்டு. ஆனால் நமது சிறந்ததை வழங்க இது சிறந்த வாய்ப்பு. நாங்கள் சிறப்பாகச் செய்து வருவதைத் தொடர்ந்து செய்வோம் என்று நான் நிச்சயமாக நம்புவோம். அகமதாபாத் பெரிய மைதானம் நிறைய ரசிகர்கள் வருவார்கள். எங்களைப் பொறுத்தவரை சிறப்பாக செயல்பட இது ஒரு பொன்னான வாய்ப்பு.
இந்தப் போட்டியால் எனது கேப்டன் பதவி பறிபோய்விடும் என்று கிடையாது. ஒரு போட்டியால், எனக்கு கேப்டன் பதவி கிடைக்கவில்லை, ஒரு போட்டியால் அதை நான் இழக்கவும் மாட்டேன். டி20யில் நாங்கள் விளையாடிய விதம், 2019ல் விளையாடிய விதம் ஆகியவற்றில் இருந்து எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. அதை எளிமையாக வைத்திருக்க விரும்புகிறோம். எங்கள் திட்டங்களைச் செயல்படுத்த இது சிறந்த வாய்ப்பாக பார்க்க விரும்புகிறோம். முக்கிய விஷயம் இந்த சந்தர்ப்பத்தை அனுபவிப்பதாகும் என்றார் பாபர் அசாம்.