என்னையும் கோலியையும் ஒப்பிட்டு பேசிக்கொள்ளுங்கள்… ஆனால் கோலி என்னை விட பெரியவர் – பாபர் அசாம் நெகிழ்ச்சி பேட்டி
சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவிற்கு எப்படி விராட் கோலியோ அப்படி பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாம் சிறப்பாக விளையாடி வருகிறார். சொல்லப்போனால் தற்போதய காலங்களில் விராட் கோலியுடன் பாபர் அசாமை ஒப்பிட்டு பேசும் அளவிற்கு அசாதாரணமான திறமைகளை காட்டி வருகிறார் பாபர் அசாம். மறுபுறம் ஒரு காலத
சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவிற்கு எப்படி விராட் கோலியோ அப்படி பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாம் சிறப்பாக விளையாடி வருகிறார். சொல்லப்போனால் தற்போதய காலங்களில் விராட் கோலியுடன் பாபர் அசாமை ஒப்பிட்டு பேசும் அளவிற்கு அசாதாரணமான திறமைகளை காட்டி வருகிறார் பாபர் அசாம். மறுபுறம் ஒரு காலத்தில் எந்த பந்து போட்டாலும் அதிரடியாக விளையாடி ரன் மெஷின் என பெயர் எடுத்த கோலி தற்போது விளையாடுவதற்கு தடுமாறி வருகிறார் என்று கூறப்படுகிறது.
சமீப காலமாக அவருடைய பேட்டிங் என்பது முழு வீச்சில் இல்லை என்பது நன்றாகவே கடந்த உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் தெரிந்தது. சமீப காலமாக அவருடைய பேட்டிங் என்பது முழு வீச்சில் இல்லை என்பது நன்றாகவே கடந்த உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் தெரிந்தது. இதனிடையே பாபர் அசாம் தற்போது சர்வதேச ஒருநாள் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.
அப்படி அந்த 2 வீரர்கள் மீது அனைவருமே எதிர்பார்ப்பும் ஒப்பீடுகளையும் வைத்திருந்தாலும் அவர்கள் இருவருமே நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள் என்று சொல்லலாம். இருப்பினும் பல ஆண்டுகளாக இரண்டும் பேரையும் ஒப்பிடப்படுகின்றன. பாபர் மற்றும் கோலியின் திறமையை தொடர்ந்து ஒப்பிட்டுப் பார்ப்பவர்கள் பலர் உள்ளனர். இந்த நிலையில் தான் இதைப் பற்றி பாபர் அசாம் தன்னை கோலியுடன் ஒப்பிடும் ரசிகர்கள் குறித்து பேசியுள்ளார்.
அவர் பேசுகையில் “இந்த விவாதத்தை ரசிகர்களிடமே விட்டுவிடுவோம். அதைப் பற்றி நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து உள்ளது. நிச்சயமாக பரஸ்பர மரியாதை உள்ளது. அவர் எனக்கு மூத்தவர், நம் பெரியவர்களை மதிக்க நான் கற்றுக்கொண்டேன் இல்லை. அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது முக்கியம் நான் என்னை விட மூத்தவர்களை மதிக்கிறேன்.
அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். நான் என் வாழ்க்கையைத் தொடங்கியபோது, அவருடைய நிறைய பேட்டிகளைக் கேட்டேன். 2019ஆம் ஆண்டில் நான் அவருடன் பேசினேன், அது எனக்கும் உதவியது. அதைப் பற்றிய விவரங்களை என்னால் சொல்ல முடியாது. இந்தியா மட்டுமின்றி, அனைத்து நாடுகளைச் சேர்ந்த அனைத்து வீரர்களுக்கும் இடையிலான பரஸ்பர புரிதல் நன்றாக உள்ளது என்று பாபர் கூறினார்.
இந்நிலையில் விராட் கோலியும் பாபர் அசாமை புகழ்ந்து பேசியிருந்தார். அவர் கூறியதாவது “நான் முதல் நாள் முதல் அவரிடமிருந்து நிறைய மரியாதையைக் கண்டேன். அது இன்னமும் மாறவில்லை அவர் அனைத்து வடிவங்களிலும் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்ற உண்மையைப் பொருட்படுத்தாமல். அவர் நிலையாக இருந்துள்ளார். அவர் விளையாடுவதை பார்த்து ரசித்திருக்கிறேன். என் மீதான அவரது அணுகுமுறை மாறுவதை நான் பார்க்கவில்லை. இந்த மாதிரியான அவர்களின் செயல்முறை மக்களை ஊக்குவிக்கின்றன