என்னங்க இது.. பாபர் அசாமுக்கு கொடுத்த காசோலையில் குளறுபடி – நடந்தது என்ன?

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக நடந்த முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் பெரிய ரன்களை குவித்தது. பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. பாக்கிஸ்தானின் முதல் இன்னிங்ஸில் சவுத் ஷாகீலுக்கு 208 ரன்களை விளாசினார். இதனால் மேன் ஆஃப்

By ·

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக நடந்த முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் பெரிய ரன்களை குவித்தது. பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. பாக்கிஸ்தானின் முதல் இன்னிங்ஸில் சவுத் ஷாகீலுக்கு 208 ரன்களை விளாசினார். இதனால் மேன் ஆஃப் தி மேட்ச் அவருக்கு வழங்கப்பட்டது. இவரின் இந்த ரன் குவிப்பானது பஸ்கிஸ்தான் அணிக்கு வெற்றிபெறும் முக்கிய காரணியாக இருந்தது.

நாள் 5 இன் தொடக்கத்தில், பாகிஸ்தான் அணிக்கு 131 ரன்கள் மட்டுமே இலக்காக இருந்தது. ஆனால் ஆடுகளம் ஸ்பின்னர்களுக்கு போதுமான உதவிகளை வழங்கியதின் காரணமாக பாகிஸ்தான் கொஞ்சம் தடுமாறியது. இலங்கை அணியின் பிரபாத் ஜெயசுரியா மற்றும் ரமேஷ் மென்டிஸ் இருவரும் அபாரமாக ஆடி விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இதனால் பாபர் அசாம், சவுத் ஷாகீல் மற்றும் சர்பராஸ் அகமது ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்தனர்.

ஆனால் இறுதியில் பாகிஸ்தான் அணி நான்கு விக்கெட்டுகளுடன் ஆட்டத்தை வென்றனர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்த பிறகு ஒரு சம்பவம் நடந்தது. அதாவது பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமிற்கு போட்டியில் வென்றதற்காக போட்டி வெற்றியாளரின் காசோலையைப் பெறச் சென்றார். அந்த காசோலையை பிடித்து கேமராக்களுக்கு போஸ் கொடுத்தார். அந்த புகைப்படம் வைரலான நிலையில் அந்த காசோலையில் ஒரு பெரிய பிழை இருப்பதை ரசிகர்கள் கவனித்தனர்.

ஏனெனில் எழுத்தில் உள்ள பணத்தின் அளவு புள்ளிவிவரங்களில் எழுதப்பட்ட தொகையிலிருந்து வேறுபட்டது. சொற்களில் உள்ள தொகை ‘அமெரிக்க டாலர்கள் இரண்டாயிரம் மட்டும்’ ஆகும் என்றும் அதே நேரத்தில் புள்ளிவிவரங்களின் அளவு US $ 5000 என்று பதிவிடப்பட்டிருந்தது. இப்படிப்பட்ட இலையில் தான் இந்த சங்கடமான தவறுக்கு மன்னிப்பு கோரியது இலக்கை கிரிக்கெட் வாரியம்.

அவர்கள் கொடுத்த விளக்கத்தில் ” பாஸ்கிதான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடயேயான முதல் டெஸ்ட் போட்டியின் வெற்றியாளருக்கு வழங்கப்பட்ட ‘ விளக்கக்காட்சி காசோலை ’ இல் ஏற்பட்ட பிழையின் எங்கள் வருத்தத்தை நாங்கள் வெளிப்படுத்துகிறோம். போட்டிக்கு முடிந்து விளக்கக்காட்சி விருதுகளை வழங்கும் உரிமையை மைத்தனத்தின் நிர்வாகம் வைத்திருக்கிறது. ITW நிறுவனமானது 2023 முதல் 2027 வரையிலான விருது வழங்கும் உரிமைகளை வாங்கியுள்ளது.

ஆயினும் இந்த தவறுக்கு இலங்கை கிரிக்கெட் மொத்த பொறுப்பை ஏற்றுக் கொள்கிறது. மேலும் எதிர்காலத்தில் கிரிக்கெட் நேசிக்கும் பொதுமக்களுக்கு இது போன்ற விஷயங்கள் மிண்டும் நடக்காது என்பதை உறுதியளிக்க விரும்புகிறது. அத்தகைய பிழைகள் தவிர்க்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் “என்று எஸ்.எல்.சி ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியானது வரும் ஜூலை 24 திங்கள் அன்று தொடங்குகிறது

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை