வீடியோ : இவர் தான் இந்தியாவிற்கு அடுத்த ரெய்னாவா? பேட்டிங்கை பார்த்து அசந்து பேசிய பேபி ஏபி டி பாராட்டு.

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி நேற்று நடந்த நிலையில் இதில் மோசமான தோல்வியை தழுவியது இந்தியா. சுப்மன் கில் இஷான் கிஷான் தொடக்கத்திலேயே சொதப்ப பின்னர் வந்த சஞ்சு சாம்சனும் அதிரடி காட்டாமல் ஆட்டமிழந்தார். பி

By ·

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி நேற்று நடந்த நிலையில் இதில் மோசமான தோல்வியை தழுவியது இந்தியா. சுப்மன் கில் இஷான் கிஷான் தொடக்கத்திலேயே சொதப்ப பின்னர் வந்த சஞ்சு சாம்சனும் அதிரடி காட்டாமல் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த திலக் வர்மா கொஞ்சம் போட்டியை கட்டுக்குள் கொண்டுவந்தார்.

மற்ற பேட்ஸ்மேன்கள் ஒருபக்கம் ஆட்டமிழக்க பொறுமையாக நின்று விளையாடிய திலக் வர்மா 22 பந்துகளில் 39 ரன்களை விளாசினார். பொதுவாக தன்னுடை முதல் போட்டி என்றால் பொறுமையாக ஆடி பின்னர் ரன்களை சேர்ப்பார் மத்தியில் தொடக்கத்திலேயே அதிரடியாக ஆட ஆரம்பித்த திலக் வர்மா தன்னுடைய 2 பந்திலேயே சிக்ஸர் விளாசினார். மேலும் அதற்கு அடுத்த பந்தும் சிக்ஸர் விளையாசிய அவர் பந்துவீச்சாளரை குழப்பி 4வது பந்தை அடிக்காமல் விட்டுவிட்டார்.

இதனால் தன்னால் அதிரடியாகவும் அதே சமயம் பொறுமையாகவும் ஆடமுடியும் என்பதை திலக் வர்மா இதன் மூலம் நிரூபித்துள்ளார். இப்படி அதிரடியாக ஆடினாலும் பந்துவீச்சாளரரிடம் ஏமாந்து ஆட்டமிழந்தார். இருந்த போதிலும் இக்கட்டான நிலைமையிலும் போராடும் விளையாட்டை பார்த்து இந்தியாவின் அடுத்த சுரேஷ் ரெய்னா இவர்தான் என்று பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்ததை நிலையில் இவர் மும்பை அணிக்காக விளையாடும் போது சக வீரராக இருந்த டிவால்ட் பிரிவியஸ் திலக் வர்மாவிக்கு வீடியோ காலில் வாழ்த்து சொல்லியுள்ளார்.

அந்த வீடியோ காலில் “ஹலோ நண்பரே நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்று நான் நமன்னுகிறேன். நான் உங்களை விடவும் மகிழ்ச்சியாக இருக்கிறேனா என்று எனக்கு தெரியவில்லை. என் தரப்பில் இருந்தும் என்னுடைய குடும்பத்தின் தரப்பில் இருந்தும் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். உங்களுடைய குடும்பமும் நீங்களும் எவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்பதை என்னால் நினைத்து பார்க்க முடிகிறது.

உங்களுடைய கனவு நினைவாவதை நான் வெளியே இருந்து பார்ப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் இந்த போட்டியில் அடித்த அந்த 2 சிக்ஸர்கள் எனக்கு புல்லரிப்பை கொடுத்தது. உங்களுக்கு என்னுடைய ஆதரவு எப்போதுமே இருக்கும் எஞ்சியிருக்கும் தொடரிலும் நீங்களும் உங்களுடைய அணியும் சிறப்பாக செயல்பட என்னுடைய வாழ்த்துக்கள், என்று அந்த வீடியோ காலில் பேசியுள்ளார் குட்டி ஏபி டி டிவால்ட் பிரிவியஸ்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை