வீடியோ : தோனிக்காக உசுரையே கொடுக்கலானு தோணுச்சு – சுவாரசிய சம்பவத்தை நினைவுகூர்ந்து பத்ரிநாத் நெகிழ்ச்சி.

இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் தோனி என்ற பெயர் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. அந்த சொந்தக்காரரான தோனி கேப்டனாக இருந்த வரையில் பல சாதனைகளை செய்து இருக்கிறது. குறிப்பாக கடந்த 2007ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை பெற்று கொடுத்தது. பின்னர் 2011 உலக கோப்பை போ

By ·

இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் தோனி என்ற பெயர் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. அந்த சொந்தக்காரரான தோனி கேப்டனாக இருந்த வரையில் பல சாதனைகளை செய்து இருக்கிறது. குறிப்பாக கடந்த 2007ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை பெற்று கொடுத்தது. பின்னர் 2011 உலக கோப்பை போட்டியில் பல வருடங்களுக்கு பிறகு உலக கோப்பையை பெற்று கொடுத்ததை இன்னமும் யாராலும் மறக்க முடியாது.

அதே போன்று கடந்த 2013ஆம் ஆண்டு உலக சாம்பியன் ஷிப் போட்டியில் கோப்பையை வென்றதன் மூலம் 3 வகையான உலக கோப்பைகளையும் பெற்றுக்கொடுத்த இந்திய கேப்டன் என்ற பெருமை தோனிக்கு கிடைத்தது. மேலும் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற பல இளம் வீரர்களுக்கு தோனி வாய்ப்பு கொடுத்திருக்கிறார். மேலும் தோனியின் குணத்தை பற்றி பலர் சொல்லி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த வகையில் தான் இந்திய அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் தோனி குறித்து சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.

அவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் “ஐபிஎல் போட்டியில் ஒருமுறை சின்னசாமி மைதாத்தில் சென்னை vs ஆர்சிபி போட்டியின் போது மழை காரணமாக போட்டியின் ஓவர்கள் குறைக்கப்பட்டது. இதனால் 6 ஓவர்கள் மட்டுமே விளையாடுவது போன்று ஆனது. எனக்கு என்னுடைய விளையாட்டு பற்றி தெரியும். 6 ஓவர்கள் போட்டிக்கு பத்ரிநாத்தை அணியில் எடுக்க வாய்ப்பு குறைவுதான் என்று நினைத்தேன். இதனால் இந்த போட்டியில் நமக்கு ஓய்வு தான் அடுத்த போட்டியில் தான் விளையாடுவோம் என்று தோன்றியது.

ஆனால் அப்போது தோனியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் பிளமிங்கும் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் என்னை பற்றித்தான் பேசுகிறார்கள் என்று தெரிந்தது. நானும் பொறுத்திருந்து பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது ஸ்டீபன் பிளமிங் இந்த போட்டியில் பத்ரிநாத் தேவையில்லை அவருக்கு பதிலாக வேறு யாரவது ஒருவரை எடுக்கலாமா என்று தோனியிடம் கேட்டார்.

அப்போது தோனி கூறினார் “இந்த ஒரு போட்டிக்காக பார்க்க வேண்டும். இந்த ஒரு போட்டியில் பத்ரிநாத்தை ஆடவைக்காமல் இருந்தால் அடுத்த போட்டியில் அவர் எனக்கு தேவைப்படுவார்கள், மேலும் வரும் போட்டிகளிலும் தேவைப்படுவார். எனவே அவர் இந்த ஒரு போட்டி இருக்கட்டும், எப்படியும் பீல்டிங் சிறப்பாக செய்வார். பேட்டிங் வருமா? என்று தெரியவில்லை, வேறு யார் விளையாடினாலும் அவர்களுக்கு பேட்டிங் வருமா? என்று தெரியவில்லை.

எனவே இந்த தொடர் முழுவதும் எப்படி விளையாடுகிறார் என்று பார்க்க போகிறேன், எனவே அவரை அப்படியே வைத்து விளையாடுகிறேன் என்றார் தோனி. அப்படி தோனி சொல்வதை நான் கேட்டபோது எனக்கு இந்த மனிதருக்காக நாம் உயிரையே கொடுக்கலாம் என்று தோன்றியது நேற்று நெகிழ்ந்து கூறினார் பத்ரிநாத். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை