இதுமட்டும் நடந்தால் வெற்றி எங்களுக்குத்தான் – பங்களாதேஷ் அணியின் பயிற்சியாளர் நம்பிக்கை.
உலக ரசிகர்கள் அனைவரும் காத்திருந்த ஒருநாள் உலக கோப்பை 2023 தொடரானது தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் ஏற்கனவே பல அணிகள் 3 போட்டிகளை விளையாடிய நிலையில் அவர்களின் பலம் எனது பலவீனம் எனது என்பது குறித்து நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த உலக கோப்பை
உலக ரசிகர்கள் அனைவரும் காத்திருந்த ஒருநாள் உலக கோப்பை 2023 தொடரானது தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் ஏற்கனவே பல அணிகள் 3 போட்டிகளை விளையாடிய நிலையில் அவர்களின் பலம் எனது பலவீனம் எனது என்பது குறித்து நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த உலக கோப்பையில் தொடர்ந்து மூன்று முறை வென்ற இந்திய அணியானது இன்று பங்களாதேஷ் அணியை எதிர்கொள்கிறது.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணியானது பேட்டிங் செய்ய தேர்வு செய்தது. ஆனால் இந்த போட்டியில் கேப்டன் சகீப் அல் ஹாசன் இல்லை. மேலும் கடந்த சில போட்டிளில் பங்களாதேஷ் அணியானது கொஞ்சம் தடுமாறி வருகிறது. சொல்லப்போனால். முதல் போட்டியை தவிர பங்களாதேஷ் அணியானது 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது.
இதனால் இந்தியாவுக்கு எதிராக வென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. மேலும் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணி மோதிய நான்கு ஒருநாள் போட்டிகளில் பங்களாதேஷ் அணியானது மூன்று முறை வென்றிருக்கிறது. இதனால் இந்த போட்டியானது மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான் பங்களாதேஷ் அணியின் பயிற்சியாளர் சண்டிக ஹதுருசிங்க தாங்கள் இந்த போட்டியை வெல்வோம் என்று நம்பிக்கை கொடுத்துள்ளார்.
அவர் பேசுகையில் “சமீப காலங்களில் இந்தியாவுக்கு எதிராக நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம், ஆனால் உலகக் கோப்பைக்கு வரும்போது, இது முற்றிலும் மாறுபட்ட ஆட்டம். நான் சொன்னது போல் இந்தியாவிற்கு எதிராக முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று நம்புகிறோம். நாங்கள் எங்களின் திறமைக்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும், இந்த உலகக் கோப்பையில் இந்தியா தான் ஃபார்ம் அணியாக இருக்கும்.
அவர்களிடம் ‘அவ்வளவு சிறப்பாக இல்லாத ஆட்டம்’ இல்லாமல் இருந்தால், நாங்கள் எங்கள் திறமைக்கு ஏற்றவாறு விளையாடினால், அது நமக்கு நல்ல விளையாட்டாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதைச் செய்ய எங்களால் முடியும், நாங்கள் எங்களை நிரூபித்துள்ளோம். சமீப காலத்தில் இந்தியாவை தோற்கடித்த நம்பிக்கையும் அந்த நினைவுகளும் குறைந்தபட்சம் தொடக்கத்திலாவது எங்களுக்கு நன்றாக தொடக்கத்தை கொடுக்கும். எனவே நாங்கள் நன்றாக தொடங்க வேண்டும் என்று கூறியுள்ளார் சண்டிக ஹதுருசிங்க.