“கிரிக்கெட் என்பது ஒழுக்கம் மற்றும் மரியாதைக்குரிய விளையாட்டு” இந்திய மகளீர் கேப்டனை விமர்சித்த பங்களாதேஷ் கேப்டன்.

இந்திய மகளீர் கிரிக்கெட் அணியானது வங்காளதேசத்திக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்த சுற்றுப்பயணத்தில் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளை இந்திய அணியானது விளையாடியது. இதில் முதலில் நடந்த டி20 தொடரில் இந்திய அணி 2 வெற்றிகளை பெற்று 2 -1 என்ற கணக்கில் வங்காள தேசத்

By ·

இந்திய மகளீர் கிரிக்கெட் அணியானது வங்காளதேசத்திக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்த சுற்றுப்பயணத்தில் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளை இந்திய அணியானது விளையாடியது. இதில் முதலில் நடந்த டி20 தொடரில் இந்திய அணி 2 வெற்றிகளை பெற்று 2 -1 என்ற கணக்கில் வங்காள தேசத்தை வீழ்த்தியது. இதனையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடந்தது.

இதில் முதல் ஒருநாள் போட்டியில் வங்காள அணியும், இரண்டவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில் மூன்றவது போட்டியானது டிராவானது. இந்நிலையில் இந்த போட்டியின்போது இந்தியா கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் விளையாடிய கொண்டிருக்க அவர் LBW காரணமாக ஆட்டமிழந்தார். ஆனால் அம்பயரின் இந்த முடிவால் கோபமடைந்த ஹர்மன்ப்ரீத் கவுர் சஸ்டெம்புகளை பேட்டினால் தாக்கினர். இதனால் இது குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் தீயை பரவியது. மேலும் இந்தியா கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருவுக்கு 75 சதவிகிதம் போட்டி தொகையில் இருந்து தண்டயனாக பிடிக்கப்பட்டது

பங்ளாதேஷ் கேப்டன் சொன்னது :

இந்நிலையில் இந்த சப்பவும் குறித்து பேசிய பங்களாதேஷ் அணியின் கேப்டன் கூறுகையில் “இது முற்றிலும் அவளுடைய பிரச்சினை. இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு வீரராக, அவர் சிறந்த பழக்கவழக்கங்களைக் காட்டியிருக்கலாம். என்ன நடந்தது என்று என்னால் சொல்ல முடியாது, ஆனால் எனது அணியுடன் புகைப்படம் எடுக்க இருந்த நான் சசரியாக உணரவில்லை.அதனால் தான் நாங்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றோம். கிரிக்கெட் என்பது ஒழுக்கம் மற்றும் மரியாதைக்குரிய விளையாட்டு என்றார்.

மேலும் பேசிய அவர் கூறுகையில் “அவர் அவுட் ஆகவில்லை என்றால் ஏன் அவுட் கொடுக்க போகிறார்கள். இந்த அம்பயர்கள் ஆண்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து எங்களுக்கு நடுவர்கள் இருந்தனர். எனவே அவர்கள் நல்ல நடுவர்கள். அவரின் அவுட் தவிர்த்து மற்ற இந்தியா அணியின் வீரர்களின் அவுட் குறித்து என்ன சொல்லுவார். அவர்களின் முடிவுகளை நாங்கள் மதிக்கிறோம். நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அம்பயர்களின் முடிவே இறுதி முடிவு. என்ற வங்கதேச மகளீர் அணியின் கேப்டன்.

இந்திய கேப்டன் கூறியது :

இப்படிப்பட்ட நிலையில் தான் போட்டி முடிந்து பேசிய அவர் கூறுகையில் “விளையாட்டிலிருந்து நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம் என்று நினைக்கிறேன். கிரிக்கெட்டைத் தவிர இந்த மாதிரியான அம்பயர்களை கண்டு நாங்கள் மிகவும் ஆச்சரியப்பட்டோம். அடுத்த முறை வங்கதேசம் வரும்போது இந்த மாதிரியான நடுவரைச் சமாளித்து அதற்கேற்ப நம்மைத் தயார்படுத்தது குறித்தும் சரியாக திட்டம் போட்டு வருவோம்.

வங்காளதேசம் நன்றாக பேட்டிங் செய்தனர், சூழ்நிலைக்கு ஏற்ப பேட்டிங் செய்தோம். நான் முன்பு குறிப்பிட்டது போல் நாங்கள் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது சில மோசமான முடிவுகளை அம்பயர்கள் எடுத்ததாக் நான் நினைக்கிறேன். ஏனென்றால் அம்பயர்கள் அளித்த சில முடிவுகளால் நாங்கள் மிகவும் ஏமாற்றமாக இருந்தது என்று கூறினார் இந்திய மகளீர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை