அம்பயர்களுக்கு கண்கள் தெரியவில்லையா? – பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலியாவை குற்றம் சாட்டும் முன்னாள் பாகிஸ்தான் வீரர்.

உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டியானது இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியவிற்கும் இடையே தற்போது நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 469 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு பெரிய அதிர்ச்சி தரும் வகையில் நட்சத்திர பேட்ஸ்

By ·

உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டியானது இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியவிற்கும் இடையே தற்போது நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 469 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு பெரிய அதிர்ச்சி தரும் வகையில் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் வரிசையாக ஆட்டமிழந்தார்கள். இருந்த போதிலும் நங்கூரமாக நின்ற ரகானே சிறப்பான கிரிக்கெட்டை விளையாடி 89 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் இந்த போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான பாசிட் அலி சற்சயான ஒரு விஷியத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவு தான் தற்போது சோசியல் மீடியாவில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

அந்த வீடியோவில் பேசிய அவர் கூறுகையில் “முதலில் நான் அங்கே அமர்ந்து வர்ணனை செய்து கொண்டிருப்பவர்களுக்கும், நடுவர்களுக்கும் நான் கைதட்டுவேன். ஏனென்றால் ஆஸ்திரேலியா தெளிவாக பந்துடன் விளையாடியுள்ளது. அனால் அதைப் பற்றி யாரும் பேசவில்லை. என்ன நடக்கிறது? என்று எந்த பேட்டரும் யோசிப்பதில்லை. உதாரணமாக பேட்டர் பந்தை விடும் போது அது நேராக ஸ்டாம்புகளை தாக்குகிறது. அதற்கான உதாரணத்தையும் தருகிறேன்.

இந்திய அணியின் பந்துவீச்சாளர் முகமது ஷமி வீசும் 54வது ஓவரில் பந்து வெளியே பிரகாசமாக இருந்ததால் பந்து ஸ்டீவ் ஸ்மித்தை நோக்கி நகர்ந்தது. இது ரிவர்ஸ்-ஸ்விங் என்று அழைக்கப்படுவதில்லை. ரிவர்ஸ் ஸ்விங் என்பது உள்ளே பளபளப்பானது பகுதி உள்ளே இருந்தால் தான் பந்து மீண்டும் உள்ளே வரும்.

ஆனால் ஆஸ்திரேலியா பந்துவீசும் போது 16, 17 மற்றும் 18வது ஓவரில் விராட் கோலி அவுட் ஆன பந்தைப் பாருங்கள்… பிரகாசத்தைப் பாருங்கள். மிட்செல் ஸ்டார்க் பந்தின் பளபளப்பான பக்கத்தை வெளியே வைத்திருந்தார் ஆனால் பந்தை வீசும் போது அது வேறு வழியில் நகர்ந்தது. அதே போல ஜடேஜா பந்தை ஆன்-சைடில் அடித்துக் கொண்டிருந்தார். ஆனால் பந்து பாயின்ட் மீது பறந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் அங்குள்ள அம்பயர்களுக்கு கண்கள் தெரியவில்லையா? இவ்வளவு எளிமையான ஒன்றைப் பார்க்க முடியாதவர்கள் யார் அங்கே அமர்ந்திருக்கிறார்கள் என்பது கடவுளுக்குத் தெரியும் என்றார் பாசிட் அலி. மேலும் பூஜா ஆட்டமிழந்தது குறித்து பேசிய அவர் “புஜாராவை நோக்கி கிரீன் பந்து வீசினார். பந்து மீண்டும் உள்ளே நுழைந்ததா? எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

பிசிசிஐ எவ்வளவு பெரிய வாரியம் அவர்களால் பார்க்க முடியாதா? அப்படி பார்க்கவில்லை என்றால் நீங்கள் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தவில்லை என்று அர்த்தம். இந்தியா இறுதிப் போட்டிக்கு வந்துள்ளதை மட்டுமே அறிந்து அவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 15-20 ஓவர்களில் பந்து எப்போதாவது ரிவர்ஸ் ஸ்விங் ஆகுமா? அதுவும் டியூக்ஸ் பந்தில்? கூகபுர்ரா பந்து இன்னும் ரிவர்ஸ் ஸ்விங் ஆகும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன், ஆனால் டியூக்ஸ் பந்து குறைந்தபட்சம் 40 ஓவர்கள் வரை நீடிக்கும் என்று விமர்சித்தார் பாசிட் அலி.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை