டி20 போட்டிக்கும் ஒருநாள் போட்டிக்கும் வித்தியாசம் இருக்கிறது – பரபரப்பை கிளப்பிய முன்னாள் பாக் வீரர்.

அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் 2023 உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் நடைபெறுகிறது. வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் வலுவான கருதப்படும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல

By ·

அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் 2023 உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் நடைபெறுகிறது. வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் வலுவான கருதப்படும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வென்று 10 வருடங்களாக ஐசிசி கிரிக்கெட் தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்தும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.

இதனிடைய இத்தொடர் துவங்குவதற்கு இன்னும் 50 நாட்கள் கூட இல்லாத நிலைமையில் கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய முக்கிய வீரர்கள் இன்னும் இந்திய அணிக்கு திரும்பாமல் இருப்பது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதை விட இந்தியாவிற்கு சமீப காலத்தில் நம்பர் 4வது இடத்தில் யார் விளையாடுவார் என்ற கேள்வி ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலான மாற்று வீரர் இல்லாததும் மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன் இல்லாததும் ரசிகர்களிடம் கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

குறிப்பாக 2011 உலகக்கோப்பை வெற்றியில் கௌதம் கம்பீர், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா போன்ற இடதுகை பேட்ஸ்மேன்கள் முக்கிய பங்காற்றிய நிலையில் தற்போதைய அணியில் ரோகித் சர்மா முதல் ஹர்திக் பாண்டியா வரை டாப் 6 பேட்ஸ்மேன்களும் வலது கை வீரர்களாக இருக்கின்றனர். இதனால் இடது கை வீரர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இருந்த போதிலும் திலக் வர்மா, ஜெய்ஸ்வால் போன்ற சில இளம் வீரர்களை இந்தியா போன்ற தயார் செய்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் தான் இந்த விஷயம் குறித்து தனது யூடியூப் பக்கத்தில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பசித் அலி பேசியுள்ளார். அவர் கூறுகையில் “திலக் வர்மா ஆசிய கோப்பையில் எப்படி விளையாடப் போகிறார் என்பதை பார்க்க ஆவல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு இடையே நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. மேலும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இதர அணிகளுக்கு இடையேயான பந்து வீச்சிலும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது”

அத்துடன் பேட்டை இறுக்கமாக பிடிப்பதற்கு பாட்டம் ஹேண்டை அவர் பயன்படுத்தும் விதம் கேட்ச் கொடுத்து அவுட்டாக அதிக வாய்ப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. மேலும் அவர் பெரும்பாலும் டாப் ஆர்டரில் நம்பர் 3வது இடத்தில் விளையாடி வருகிறார். மறுபுறம் இந்திய அணியில் உலக கோப்பையில் 3வது இடத்தில் விளையாட விராட் கோலி இருக்கிறார். ஒருவேளை இவருக்காக விராட் கோலி 4வது இடத்தில் விளையாடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்று கூறினார் பசித் அலி.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை